பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார் இயேசு
Jesus passed by, He saw a man who was blind from birth.(John 9 :1)
Jn9:22; Mt9:27-29; Mt20:29-34; Mk9:21; Lk8:43; Jn5:5; Act3:1,2; Act9:33; Act14:8.
அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். (யோவான் 9:1)
யோவான் 9:22; மத்தேயு 9:27-29; மத்தேயு 20:29-34; மாற்கு 9:21; லூக்கா 8:43; யோவான் 5:5; அப்போஸ்தலர் 3:1,2; அப்போஸ்தலர் 9:33; அப்போஸ்தலர் 14:8.
பிறவிகுருடன்:
தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே குருடனாகப்பிறந்தான். கண்கள் இருந்தும் ஒளியிழந்தவனாய் பிறந்தான். சத்து குறைபாட்டினால் கண்களின் ஒளி இழந்தானா அல்லது தாயின் கவனகுறைவினால் குருடனாய் பிறந்தானா என்பதை நாம் ஆராயமுடியாது.
தேவன் மனிதனை செம்மையானவனாகவே உண்டாக்கினார் என்று விவிலியம் கூறுகின்றது. குருடனாகவோ, முடவனாகவோ, செவிடனாகவோ உருவாக்க விரும்பவில்லை. ஒவ்வொரு மதங்களும் இவ்வாறு பிறப்பதற்குரிய காரணங்களையும், பரிகாரங்களையும் தேடியுள்ளன. நமது விவிலிய மக்கள் ஒருசில கண்ணோட்டம் உள்ளவர்களாயிருந்துள்ளனர் என்பதை நாளையதினம் கவனிக்கலாம். குருடனாய் பிறப்பவனையும், முடம், செவிடு, மற்றுள்ள ஊனமாய் பிறப்பவரையும் தேவன் கவனிக்காமல் இருப்பதில்லை. இந்த குருடனை இயேசுகண்டு அவனுக்கு சுகம் கொடுத்ததுபோல ஒவ்வொரு ஊனத்துக்கும் தேவனால் – கிறிஸ்துவால் – ஆவியால் முடிவு உண்டாக்க முடியும். நாம் உடலளவில் ஊனமாயிருப்பதை விடவும் உள அளவில் ஊனமாயிருப்பதே தவிர்க்கபடவேண்டியதாயுள்ளது. இயேசுகிறிஸ்து நமது எத்தகைய ஊனங்களையும் இகண்டு நமக்கு விடுதலை தரும்படியாக நாம் அவர் முன்னிலையில் நடந்து கொள்வோம்.
கர்த்தாவே உமது மகன் மூலம் எங்களது ஊனங்களை விலக்கி எங்களை மீட்டு நல்ல ஆரோக்கியத்துடனும் திட விசுவாசத்துடனும் வாழ எங்களுக்கு உதவி செய்யும்.