பிரதான ஆசாரியர், பரிசேயர் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து.
chief priests,Pharisees gathered a council said,What shall we do? For this Man works many signs. (John 11:47)
Mt26:3; Mt27:1,2; Mk14:1; Lk22:2; Jn12:19; Act4:5,6,16,17,27,28; Act5:21,24; Ps2:1-9; Ps62:1-4; Ps83:1-18.
அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. (யோவான் 11:47)
மத்தேயு 26:3; மத்தேயு 27:1,2; மாற்கு 14:1; லூக்கா 22:2; யோவான் 12:19; அப்போஸ்தலர் 4:5,6,16,17,27,28; அப்போஸ்தலர் 5:21,24; சங்கீதம் 2:1-9; சங்கீதம் 62:1-4; சங்கீதம் 83:1-18.
ஆலோசனை சங்கம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ராயேலரின் குலமகனாக வந்திருந்தும் அவரை அறியாமல் சத்துருவுக்கும், அந்நியருக்கும் செய்வதுபோல அவரை உபத்திரவப்படுத்தினார்கள். அவரை உபத்திரவப்படுத்துவதற்கு யூதர்களின் ஆலோசனை சங்கம் பெரும்பங்கு வகித்தது.
கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் அழிப்பதற்கு உரோமர்களுடன் சேர்ந்து இச்சங்கம் பல உபாயங்களைச் செய்தது. ஆனாலும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை உறுதிப்படுத்திய சங்கத்தால் இயேசுவின் உயிர்த்தெழுதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சங்கத்தின் சிந்தனைக்கும், செயலுக்கும் எதிரிடையாக கிறிஸ்தவம் வேகமாக படர்ந்து பரவி வளர்ந்தது.
திருச்சபை சரித்திரங்களிலும் பல கால கட்டங்களில் பல சங்கங்கள், அமைப்புகள், நாடுகள், அரசுகள் எழும்பி கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார்கள். கிறிஸ்தவர்களிடையில் ஆயிரம் குறைகள் காணப்பட்டாலும் இன்னும் இருளுக்கு எதிராகவும், பாவத்துக்கு எதிராகவும், சாத்தானுக்கு எதிராகவும் வேகமாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
சமீப காலங்களாக நமது இந்திய தேசத்தில் சில அமைப்புகள் எழும்பி கிறிஸ்தவத்தையும், கிறிஸ்துவையும் இகழ்ந்து பேசி கிறிஸ்தவ சமுதாயத்தையும், சபைகளையும், சபை சார்பு இயக்கங்களையும் அழிப்பதற்காக பல ஆலோசனைகளை செய்து பல உபாய தந்திரங்களை அரங்கேற்றி வெற்றி பெறுவதாக நினைத்து கொள்கின்றனர் – மார்தட்டிக் கொள்கின்றனர்.
சங்கீதம் 2 ல் சொல்லப்பட்டுள்ளதுபோல இவர்களின் உபாயங்களைச் சிதைத்து இவர்களை நொறுக்கிப்போட சீயோன் மலையின்மேல் மேசியாவாகிய இயேசுவை தேவன் அபிஷேகம் பண்ணி வைத்துள்ளார் என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள். எவ்வளவுக்கதிகமாக சபைகளை உடைத்தும், கிறிஸ்தவர்களை உபத்திரவபடுத்தியும், கிறிஸ்தவத்தை கொச்சைப்படுத்தியும் மாறுபாடாக செய்கின்றார்களோ அவ்வளவுக்கதிகமாக சபைகள் பட்டிதொட்டியெங்கும் பெருகும், இருள் விலகும், பாவங்கள் அகலும், சாத்தான் தோற்கடிக்கப்படுவான், இனங்கள் கலகலத்து போகும், கிறிஸ்தவம் தழைக்கும், கிறிஸ்தவர்கள் செழிப்பர்.
எல்லா சங்கங்களுக்கும் பதில் செய்யும்படி இயேசு ராஜாதி ராஜாவாக வரப்போகிறார்.
… இந்த யோசனையும் இந்த கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்தானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால் அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள். அப்போஸ்தலர் 5:38,39.