விரும்புகிறார்

தொழுகிறவர்கள் இப்படியிருக்க பிதா விரும்புகிறார்.

The Father is looking for those who will worship him that way. (John 4:23)
Jn7:4,18; jn17:24; Mt9:13; Lk12:49; 1Co13:5; 1Pt2:9; Ex4:13; Ps37:28; Ps40:8; Ps147:11; Pr15:8; Isa43:21; Isa55:11; Isa58:2; Eze22:30; Eze33:11; Hos6:6; Mi7:18.

உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். (யோவான் 4:23)

யோவான் 7:4,18; யோவான் 17:24; மத்தேயு 9:13; லூக்கா 12:49; 1கொரிந்தியர் 13:5; 1 பேதுரு 2:9; யாத்திராகமம் 4:13; சங்கீதம் 7:28; சங்கீதம் 40:8; சங்கீதம் 51:6; சங்கீதம் 135:6; சங்கீதம் 147:11; நீதிமொழிகள் 15:8; ஏசாயா 43:21; ஏசாயா 55:11; ஏசாயா 58:2; எசேக்கியேல் 22:30; எசேக்கியேல் 33:11; ஓசியா 6:6; மத்தேயு 7:18.

தேவனின் விருப்பம்:

1. தன் விருப்பத்தை தானே செய்யும் தேவன். சங்கீதம் 135:6 ல் கர்த்தர் தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். இது தேவனை பற்றி நாம் அறியவேண்டிய முதல் மனோபாவம்.

2. தம் விருப்பம் செய்ய எதிர்பார்க்கிறார். ஆவியோடும், உண்மையோடும் தொழுகை செய்ய வேண்டுமென்பதே அவரின் விருப்பம். தேவனை தொழுகிறவர்கள் தேவனுடைய தன்மையில் நின்று – வாழ்ந்து தொழுவதையே விரும்புகிறார்.

3. தம் விருப்பத்தை தூதர்களை கொண்டு செய்கிறார். தூதர்கள் தேவனை அவரின் தன்மையில் நின்று தொழுகிறவர்களாகையினால் அவர்களை கொண்டு யாவற்றையும் எளிதாக செய்கிறார்.

4. தம் விருப்பத்தை இயற்கையை கொண்டு செய்கிறார். காலநிலை மாற்றங்கள், பூமியின் நன்மைகள், இயற்கையில் உண்டாகும் சாதக, பாதகங்கள் ஆகிய யாவற்றையும் இயற்கையை கொண்டு அவர் நடப்பிப்பவையாகும். இதன் மூலம் அவரது வல்லமை, மகிமை, சாயல் வெளிப்படுகிறது.

5. தம் விருப்பத்தை மனிதர்களை கொண்டு செய்கிறார். சில நேரங்களில் தன் விருப்பத்தை செய்ய பணித்தபின்பு அந்நபரைகைவிடுகிறார். இதனை use and throw என்லாம்.
சில நேரங்களில் தாம் செய்ய விரும்புவதை செய்ய பணிக்கின்றார். அவர்கள் அதை தொடர்ந்து செய்ய அவர் விரும்புகின்றார். அவர்கள் விரும்புவது வரையிலும் அவர்களை கொண்டு செய்வார். அவர்கள் வெளியேற நினைத்தால் விட்டுவிடுவார்.
சில நேரங்களில் தம் விருப்பம் செய்ய பணிக்கின்றார். கீழ்படியாமல் விலகி சென்றாலும் விடமாட்டார். பின்வாங்கி போனாலும் விடமாட்டார். கீழ்படிவது வரையிலும் விடமாட்டார். சிலநேரங்களில் தம் விருப்பம் செய்ய முழு மன விருப்பம் கொள்வோரோடு இணைந்து பயணிக்கின்றார்.

6. தம் விருப்பத்தை பிற உயிரனங்களை கொண்டும் செயல்படுத்துகின்றார்.

7. பிதாவை ஆவிக்குள்ளும், உண்மைக்குள்ளும் நின்று தொழுது கொள்ள தங்களை ஒப்படைப்பவர்களை அவர் தேடுகின்றார். விரும்புகிறார் என்ற சொல்லுக்கு தேடுகிறார் என்றும் பொருள் உண்டு. தேடுகிறவரின் விருப்பத்தை அறியவே தேவன் தமது ஆவியை தமது குமாரனால் மீட்கபட்டவர்களுக்குள் வைக்கின்றார். பரிசுத்த ஆவியினாலேயன்றி வேறு எவ்விதத்திலும் அவர் விருப்பத்தை நாம் அறிய இயலாது. Bible அவர் விருப்பம் செய்தவர்களின் சாட்சியங்கள். Book of Witness. It leads to Faith in God.

*கர்த்தாவே, நாங்கள் உம்மை முழுமையாக சிநேகித்து ஆவிக்குள்ளும், உண்மைக்குள்ளும் நின்று தொழுகை செய்யவே உமது நல்ல ஆவியை எங்களுக்கு தந்தீர். எனவே நீர் எங்களுக்கு தந்துள்ள நல்ல ஆவியை ஒருபோதும் துக்கப்படுத்தாமல் அவரின் ஏவுதலுக்கு கீழ்படிந்து உமது நல்ல விருப்பங்களை செம்மையாய் செய்ய எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME