பிசாசானவன் யூதாஸின் இருதயத்தைத் தூண்டினான்

பிசாசானவன் யூதாஸின் இருதயத்தைத் தூண்டினான்.

Devil having already put it into the heart of Judas Iscariot,Simon son,to betray Him, (John 13:2)

John13:27; John 6:70; Luke 22:3,31; Acts 5:3; Ephesians 2:3; James1:13-17; Revelation 17:17; 2Corinthians 8:16.

சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில், (யோவான் 13:2)

யோவான் 13:27; யோவான் 6:70; லூக்கா 22:3,31; அப்போஸ்தலர் 5:3; எபேசியர் 2:3; யாக்கோபு 1:13-17; வெளி17:17; 2கொரிந்தியர் 8:16.

தூண்டப்பட்ட இருதயம்:
யூதாஸ் கர்த்தராகிய இயேசுவினால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட ஒருவன். அவரோடுகூட மூன்றரை வருடங்கள் தேவ இராஜ்ஜிய பணியைச் செய்தவன். பணப்பையை தன் கையில் வைத்திருந்ததினால் என்னவோ 30 வெள்ளிகாசுக்கு அடிமைபட்டு இயேசுவைக் காட்டிக்கொடுக்க சமயதலைவர்களோடு ஒப்பந்தம் செய்திருந்தான். இந்த செயல் பிசாசானவனால் தூண்டபட்ட இருதயம் உடையவன் என்ற அவசொல்லுக்கு அவனை ஆளாக்கியது.

நமது இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது என்று விவிலியம் கூறுகின்றது. இருதயத்திலிருந்து 13 வகையான் பாவங்கள் புறப்பட்டு வரும் என்று இயேசு கூறுகின்றார். மாற்கு7:20-23.

இருதயத்தை உண்டுபண்ணினவர் தேவன். தேவனால் உண்டுபண்ணப்பட்ட இருதயத்தில் நற்குணங்களே நிறைந்து இருந்தது. பாவம் செய்ய வலிய சர்ப்பத்தினால் தூண்டப்பட்டபின்பு மனிதனுடைய இருதயம் பொல்லாப்புகளினால் நிரம்பிற்று. ஆட்டை கடித்து, மனிதனை கடித்து, முடிவில் தேவகுமாரனையே கடிக்க எழும்புகிறது பிசாசு.

மனிதனுடைய இருதயம் மாம்ச கவர்ச்சிகளினாலும், ஐசுவரிய மயக்கத்தினாலும், ஆடம்பர பொருள்களினாலும், பிசாசுகளினாலும் தூண்டப்பட்டு தாங்களும் கெட்டு தேவனுடைய சாயலையும், அபிஷேகத்தையும் இழந்து சபையையும் வீட்டையும் தீட்டுபடுத்தி தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு அன்னியர்களாகி நரகத்தின் வாரிசுகளாக ஆக்கப்பட்டு அஞ்ஞான இருளுக்குள் வைக்கப்படுகிறார்கள்.

தேவனால் தூண்டப்பட்டதும், வசனத்தினால் உரமேற்றப்பட்டதுமான இருதயம் உடையவர்களாய் இருப்போம். பிசாசுக்கு இடம் கொடாதீர்.
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். சோதிக்கபடுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். யாக்கோபு1:12-16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME