பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை

பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை

Whoever abides in Him does not sin. Whoever sins has neither seen Him nor known Him. (1John 3:6)

1John 2:28; John 15:4-7; 1John 3:9; 1John 2:4; 1John 4:8; 1John 5:18; 2Corinthians 3:18; 2Corinthians 4:6; 3John 1:11.

அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. (1 யோவான் 3:6)

1யோவான் 2:28; யோவான் 15:4-7; 1யோவான் 3:9; 1யோவான் 2:4; 1யோவான் 4:8; 1யோவான் 5:18; 2கொரிந்தியர் 3:18; 1கொரிந்தியர் 4:6; 3யோவா 1:11.

பாவம் செய்கிறவன்:

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலும் கிறிஸ்தவ சட்ட திட்டங்களை கைக்கொள்ளாமலும் இருக்கிறவர்கள் யாவரும் பாவம் செய்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள். தாங்கள் எவ்விதமான தவறுகளை செய்யவில்லை என்று வாதிட்டாலும் கிறிஸ்துவை நிராகரித்து, விவிலிய சட்டங்களை கைக்கொள்ளாதிருப்பதும் பாவமேயாகும். பாவத்தின் வேர் அவர்களின் சிந்தைகளில் காணப்படுவதினால் விவிலிய சட்டத்துக்கு அவர்களை கீழ்படியபண்ண இடம் தருவதில்லை. நல்லது, நன்மை இது என்று தெரிந்தும் அதை பின்பற்ற இயலாதபடிக்கு சிந்தைகளிலே கட்டப்பட்டவர்களாயிருப்பர்.

சத்தியத்தை சொன்னாலும், இரகசியங்களை பேசினாலும் மனம் வேறுபட்டு போனதினிமித்தம் செவிகொடுக்க இயலாதவர்களாயுள்ளனர். காதுகளில் கேட்பதையும், கண்களினால் படிப்பதையும் இருதயத்தில் கொண்டுபோய் நிலை நிறுத்திக் கொள்ள இயலாத காரணம் பாவசிந்தையே.

அவரில் நிலைத்திராமலும் அவர் தன்னில் நிலைத்திராமலும் இருப்பதினால் பாவமான காரியங்களை செய்கிறார்கள். இவர்கள் அவரை காணவுமில்லை, அறியவுமில்லை என்பதாகும். பாவம் செய்கிறவன் எவனும் அவரை அறியாமலும் காணாமலும் இருந்து மென்மேலும் பாவத்தை உடையவர்களாகின்றனர். அவரை அறிந்ததாகவும், அவரை கண்டதாகவும் கூறுகின்ற எவரும் பாவசிந்தைகளையோ, பாவகிரியைகளையோ கொண்டிருப்பதில்லை. அவர்களில் கசப்புகளும், வெறுப்புகளும், துர் சிந்தைகளும், சூதுவாதுகளும் காணப்படுவதில்லை. திறந்த உள்ளமாகவே காணப்படுவார்கள்.வெளிச்சம் அவர்களில் இருப்பதினால் இருளுக்குரிய செயல்களில் தங்களை ஈடுபடுத்தார்கள்.

பாவம் செய்கிறவனோ இவைகளுக்கு நேர் எதிராக காணப்படுகிறான். வெளிச்சம் இல்லாததினால் இடறலிலும், இடறபண்ணுவதிலும் குறியாகக் காணப்படுவான். கசப்புகளையும், வெறுப்புகளையும் சுமந்து திரிவார்கள். தோற்றத்தில் நல்லவர்களைப்போல காணப்பட்டாலும் உள்ளத்திலோ இருளுக்குரியவைகளினால் நிறைந்துக் காணப்படுவார்கள். எப்போதும் கற்றாலும் ஒருபோதும் தேறாதவர்களாகக் காணப்படுவர். தரிசு பூமியில் எவ்வளவு மழை பெய்தாலும் பயன் தராதிருப்பதுபோல இவர்கள் காணப்படுவர். கர்த்தருடைய வார்த்தைகளுக்கு இனங்காமலும், கீழ்படியாமலும் காணப்பட்டாலும் நியாயபிரமாண போதகராயிருக்க பிரயாசப்படுவார்கள். பொருளாசையையும் புகழையும் நாடிப்போகிற எவரும் பாவத்தின் பிள்ளைகளாகவே காணப்படுகிறார்கள்.

பாவம் செய்கிற எவரும் தேவனுடைய பிள்ளைகளாயிராமல் பிசாசின் பிள்ளைகளாகவே காணப்படுகிறார்கள். தோற்றத்தில் தேவனுடைய பிள்ளைகளாகவும் கிரியைகளில் பிசாசின் பிள்ளைகளாகவும் காணப்படுகிறார்கள். கிறிஸ்துவை உயர்த்திக் காட்டும் சட்டங்களை புறக்கணிப்பவர் எப்படிப்பட்ட மனுஷராயிருந்தாலும் பிசாசின் பிள்ளைகளாகவே காணப்படுவர்.

கேள்வி. கிறிஸ்துவுக்காய் வாழ்கிறேன் என்று சொல்லுகிறவன் கிறிஸ்துவில் நிலைத்திருந்து கிறிஸ்துவை வெளிப்படுத்த இயலாத காரணம் என்ன?

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. யோவான் 15:6-12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME