பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாலொழிய ஒருவனும் ஒன்றையும் பெறவியலாது.
A man can receive nothing unless it has been given to him from heaven.(John3:27)
Mt25:15; Mk13:34; Ro12:6; 1Co2:12-14; 1Co3:5; 1Co4:7; 1Co12:11; 1Co15:10; Ep3:7,8; 1Ti2:7; Jas1:17; 1Pt4:10,11; 1Chr28:4,5; Jer1:5; Jer17:16; Am7:15.
யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.(யோவான் 3:27)
மத்தேயு 25:15; மாற்கு 13:34; ரோமர் 12:6; 1கொரிந்தியர் 2:12-14; 1 கொரிந்தியர் 3:5; 1 கொரிந்தியர் 4:7; 1 கொரிந்தியர் 12:11; 1 கொரிந்தியர் 15:10; எபேசியர் :7,8; 1தீமோத்தேயு 2:7; யாக்கோபு 1:17; 1 பேதுரு 4:10,11; 1நாளாகமம் 28:4,5; எரேமியா 1:5; எரேமியா 17:16; ஆமோஸ் 7:15
பரலோகத்திலிருந்து கொடுக்கபட்டாலே நாம் பெறமுடியும்.
1. ஆதி மனிதருக்கு யாரிடம் கேட்டு அவனுக்கு ஜீவன் கொடுத்தார்?
2. உலகையும், அதிலுள்ளவைகளையும் யாரிடம் கேட்டு அவர் சிருஷ்டித்தார்?
3. நமக்கு ஒன்றை கொடுக்கும்படியாய் அவர்.
– கிருபையுள்ளவராயிருக்கிறார்.
– மனிதர்மேல், பாவம் இருந்தபின்பும் அன்புள்ளவராயிருக்கிறார்.
– பூரண விருப்பம் – சித்தம் உள்ளவராயிருக்கிறார்.
– யாவையும் கொடுக்கும் ஆற்றலுள்ளவராயிருக்கிறார்.
– யாவையும் கொடுக்கதக்கதான ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார்.
4. அவர் பரலோகிலிருந்து நமக்கு கொடுக்க நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன?
5. பரலோகிலிருந்து கொடுக்கபடுகிறவைகள் திரும்ப அவரிடம் கணக்கு கொடுக்கபடும்படியாயாகவே இருக்கும்.
6. பரலோகிலிருந்து கொடுக்கபடுகிறவைகளை பூமிக்குரியவைகளோடு சம்பந்தபடுத்தலாகாது.
7. நாம் ஒன்றை பெறாதிருக்கும்போது அவர் நமக்கு கொடுக்கும் நாள் வரையிலும் பொறுமை பூரண கிரியை செய்யக்கடவது.
8. அவர் நமக்கு கொடுக்கிறவைகளால் நாம் திருப்பி செய்யவேண்டியவை.
– நன்றி செலுத்த வேண்டும்.
– அவருக்கு திரும்ப கொடுக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்.
– இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும்.
9. பரலோகிலிருந்து கொடுக்கபடுகிறவைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தபடலாம். எச்சரிக்கை.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு தந்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் மற்றவர்களும் உம்மிடமிருந்து பெறதக்க நல்ல வடிகால்களாய் இருக்கதக்க நல்ல இருதயம், சிந்தையை எங்களுக்கு தாரும். நீர் எங்களுக்கு கொடுத்தாலும் கொடாவிட்டாலும் நாங்கள் உம்மிலே நிலைத்து நிற்க போதுமான கிருபை தாரும்.