நீ இஸ்ராயேலரின் போதகராயிருந்தும் இவைகளை அறியவில்லையா

நீ இஸ்ராயேலரின் போதகராயிருந்தும் இவைகளை அறியவில்லையா?

Are you the teacher of Israel, and do not know these things? (John 3:10)
1Tim1:7;Jas3:1;Mk11:33;7:18;Ro8:28;Phil3:3;Col2:11;Ps51:6,10;73:1.

இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? (யோவான் 3:10)

1தீமோத்தேயு 1:7; யாக்கோபு 3:1; மாற்கு 11:33; மாற்கு 7:18; ரோமர் 8:28; பிலிப்பியர் 3:3; கொலோசெயர் 2:11; சங்கீதம் 51:6,10; சங்கீதம் 73:1.

இவர் ஒரு போதகராயிருந்தும் அறியாத காரணமென்ன?
1. இவரில் இருதய விருத்தசேதனம் நடந்தேறவில்லை.
2. குருட்டாட்டம் – மனகுருடு நிறைந்த இஸ்ராயேலரின் கூட்டத்தோடு இணந்தவனாயிருப்பதினால்.
3. மோசேயின் பிரமாணங்களையும், தீர்க்கதரிசனங்களையும் கற்றறிந்தும் அவைகளின் உண்மைதன்மைகளை அறிந்திருக்கவில்லை.
4. பாரம்பரிய அணுகுமுறை விவிலியத்தின் உண்மையை மறைக்கும்.
5. தேவனுடைய ஆவியை பெறாதிருக்கும் போதகன் விவிலியத்தின் முப்பொருள் தன்மையாகிய நிகழ்வு பொருள், கருப்பொருள், ஆவிசார்பு பொருள் ஆகியவைகளின் ஆவிசார்புபொருளை அறிவதில்லை.

இக்காலத்திலும் இதேமாதிரிபட்ட ஒரு நிலைமை அநேக போதகர்மார்கள், பிரசங்கிமார்களிடையில் காணப்படுகிறது.

ஆவியானவர் தங்களில் இருப்பதாக கூறிக்கொள்ளும் பெரியமனிதர்கள் மற்றும் சிறிய மனிதர்கள் விவிலியத்தின் முப்பொருள்களை அறியாதிருப்பதை கவனிக்கும்போது வேதனையாகவுள்ளது.

இவர்களுக்கு தேவன் பிரகாசமுள்ள மனக்கண்களை தரவேண்டும் என்று ஜெபிப்பதை தவிர வேறு என்னச் செய்வது?

சகோதரர்களே, நீங்களும் இந்த நிக்கெதேமுவை போல இருக்கிறீர்களா?

மாறுங்கள்… மாற்றுங்கள்…

நாம் தேவனுடைய ஆழங்களை அறிந்துகொள்ள அவரிடம்தான் செல்லவேண்டுமே தவிர வேறு இடங்களல்ல.

கர்த்தாவே, உமது வாக்கியங்ககளை அறிந்துக்கொள்ளும்படி எங்கள் இருதயங்களை திறந்து எங்களுக்கு பிரகாசமுள்ள மனகண்களை தந்தருள வேண்டுமாறு உம்மிடம் இறைஞ்சுகிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME