நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.
Then they reviled him and said,You are His disciple,but we are Moses’ disciples. (John 9:26-28)
Jn7:47-52; Mt5:11; Mt27:39,40; 1Cor4:10-13; Act6:11-14; Act14:22; Phi1:27-30; 1Pet2:23.
நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். (யோவான் 9:26-28)
யோவான் 7:47-52; மத்தேயு 5:11; மத்தேயு 27:39,40; 1கொரிந்தியர் 4:10-13; அப்போஸ்தலர் 6:11-14; அப்போஸ்தலர் 14:22; பிலிப்பியர் 1:27-30; 1பேதுரு 2:23.
துன்புறுத்தல்கள்:
விசுவாச பாதையில் துன்புறுத்தல்கள் உண்டு. எதிர்த்து போராடுகிறவர்கள் உண்டு. உபத்திரவங்கள், துன்புறுத்தல்கள் வழியாகதான் தேவ இராஜ்ஜியத்துக்குள் கடந்து செல்ல வேண்டும்.
இங்கே இந்த பிறவி குருடன் , அவன் குருடனாயிருந்தபோது அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. பாவி என்று புறந்தள்ளினார்கள். பார்வை பெற்றபோதிலும் பாடுகளும், துன்பங்களும் தொடர்கின்றது.
ஆனால் தான்பெற்ற நன்மைக்குரிய சிறந்த சாட்சியாக நிற்கின்றான். தான் அவருடைய சீஷர் என்றும் முழங்குகின்றான். திரும்ப திரும்ப கேட்டதினால் நீங்களும் அவரின் சீஷராக விருப்பமா என்று நெத்தியடி கேள்வியையும் எழுப்புகின்றான்.
இயேசுகிறிஸ்துவினால் சீஷராக்கப்பட்டவர்களும் உண்டு. அவரிடமிருந்து நன்மையை பெற்றதினிமித்தம் தங்களையே அவரின் சீஷராக்கி கொண்டவர்களும் உண்டு. முந்தியது அழைப்பினால் உண்டான சீஷத்துவம். பிந்தியது விசுவாசத்தினால் உண்டான சீஷத்துவம். விசுவாசத்தினால் தன்னை சீஷராக்கிகொள்வது நன்றியுள்ள இருதயத்தின் பிரதிபலிப்பு ஆகும்.
எதிர்த்து பேசுகிறவர்கள், அடித்து உதைக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனாலும் நாம் கிறிஸ்துவின்மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்காமல் இருப்போமானால் முன்னிலைமையிலும் நம் பின்னிலைமை அதிக நன்மையாயிருக்கும்.
வெளி2:10 ன் வாக்குதத்தம் நமக்கு தரப்பட்டுள்ளது. என்வே நாம் மருளாமல் விசுவாச பாதையில் முன்னிட்டு செல்வோம்.
கர்த்தாவே உம்மை பின்பற்றி உமக்கு சாட்சியாக இருப்பதினிமித்தம் வரக்கூடிய துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் விசுவாசத்தில் முன்னேறி செல்ல எங்களுக்கு உதவி செய்யும்.