நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
Whoever commits sin also commits lawlessness, and sin is lawlessness. (1John 3:4)
Numbers 15:31; 1Samuel 15:24; 2Chronicals 24:20; Isaiah 53:8; Daniel 9:11; Romans 3:20; Romans 4:15; James 2:9-11.
பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (1 யோவான் 3:4)
எண்ணாகமம் 15:31; 1சாமுவேல் 15:24; 2நாளாகமம் 24:20; ஏசாயா 53:8; தானியேல் 9:11; ரோமர் 3:20; ரோமர் 4:15; யாக்கோபு 2:9-11.
மீறுதலே பாவம்.
மீறுதல் என்பதற்கு சட்டம் இல்லாதிருத்தல் என பொருள் தரப்பட்டுள்ளது. சட்டத்தை தெரியாததினாலோ, சட்டத்தை மறுப்பதினாலோ மீறுதல் உண்டாகின்றது. இந்த மீறுதலே பாவம் ஆகும்.
நியாயபிரமாணத்தைக் கொண்டிருந்த இஸ்ராயேலர் நியாயபிரமாணத்தை கடைபிடிக்காமல் விட்டுவிட்டு தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்தனர். ஆகையினால் எந்த நியாயபிரமாணம் அவர்களின் நன்மைக்காய் தரப்பட்டதோ அதே பிரமாணம் அவர்களுக்கு தீமைக்கேதுவானதாக மாறியது. நியாயபிரமாணத்தைக் கொண்டிராதது தேவனை விட்டு விடுவதேற்கேதுவானது.
நியாயபிரமாணத்தைக் கொண்டிராத புறஜாதியார் தங்களுக்குள் பிரமாணம் இருப்பதை உணர்ந்துள்ளனர். நன்மை தீமை என்ற பிரமாணம் எல்லா மனிதர்க்குள்ளும் இருக்கின்றது. நியாயபிரமாணம் இல்லை என்று சொல்லுகிறவன் நன்மை தீமை உண்டென்று அறியும் பிரமாணத்தினால் தீர்ப்பிடப்படுகிறான். இந்த பிரமாணத்தின்படியாக மீறுதலுக்குள்ளாகின்றான். செய்யக்கூடாது என்று அறிந்திருந்த நீ அதை செய்ததினால் அதன்படியாகவே தீர்ப்படைய வேண்டும்.
நியாயபிரமாணம் இல்லையென்று பவுல் சொல்லவில்லை. நியாயபிரமாணம் தேவையில்லை என்றும் பவுல் சொல்லவில்லை. நியாயபிரமாணம் இருப்பதினால்தான் இயேசு கிறிஸ்துவின் இரட்சண்யம் ஜீவனுள்ளதாயிருக்கின்றது. சட்டமும் சடங்குகளும் இணைந்ததுவே நியாயபிரமாணம். சட்டங்களை ஒதுக்கித்தள்ள சொல்லாமல் சடங்குகளையே ஒதுக்கிவைக்க கூறினார். இயேசு கிறிஸ்துவின் பெரிய இரட்சண்ய திருப்பணியானது எல்லா பிரமாணங்களின் சடங்குகளுக்கும் முற்றுபுள்ளி வைத்தது. 10 கட்டளைகளே சட்டங்களாகும். லேவியராகம விதிகளே சடங்கு சார்ந்தவிதிகளாகும். சட்டம் மாறவில்லை. சடங்குகள் மாறிவிட்டது. சட்டம் கேட்கின்ற நீதியை இயேசு கிறிஸ்துவின் இரசண்ய திருப்பணிக் கொடுக்கின்றது. அதே நீதியை இயேசுவை விசுவாசிப்பதின்மூலம் நமக்கு கிடைக்க செய்கின்றது.
யோவான் கூறும் நியாயபிரமாணம் என்பது 10 கட்டளைகள் சார்ந்தது மட்டுமேயாகும். இந்த வேறுபாட்டை உணராமல் பல தேவனுடைய மனிதர்கள் பொத்தாம் பொதுவாக நியாயபிரமாணம் தேவையில்லை என்று வாதாடி சட்டத்தை மீறுகிறார்கள். இவ்விதம் சட்டத்தை மீறுவது பாவமாகும். பாவம் என்பது தேவனை நிராகரிப்பது ஆகும். தேவன் கொடுத்த சட்டத்தை நிராகரிக்கிறவன் தேவனையும் நிராகரிக்கிறான் என்ற இரட்டை பாவத்துக்குள்ளாகின்றான். இது அறிந்து செய்யும் பாவமாகும். அறிந்து செய்யும் பாவத்துக்கு அனேக அடிகள் மட்டுமல்ல நிராகரிக்கப்படுதலும், வெளியேற்றப்படுதலும் உண்டு.
காலாகாலத்துக்கு மாறக்கூடிய சட்டங்களை தேவன் தந்திருக்கவில்லை. இவ்வுலகம் இருப்பது வரையிலும் 10 கட்டளைகளும் இயேசுவும் இயேசுவின் இரட்சண்ய செயல்களும் இருந்து கொண்டேயிருக்கும்.
கேள்வி. சட்டம் தேவையில்லையெனில் எந்த சட்டவிதிகள் நம்மை, நமது செயல்களை கட்டுபடுத்துகின்றன?..
ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:12-17.