நித்திய வாழ்வு பெற இவைகள் எழுதப்பட்டுள்ளது.
These are written that u may believe, may have life. (John 20:31)
John 1:49; John 6:69,70; John 9:35-38; John 3:15,16; John 10:10; Matthew 16:16; Matthew 27:54; Romans 1:4,5; 1John 4:15; 1 John 5:7; Revelation 2:18; Psalms 2:7,12.
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31)
யோவான் 1:49; யோவான் 6:69,70; யோவான் 9:35-38; யோவான் 3:15,16; யோவான் 10:10; மத்தேயு 16:16; மத்தேயு 27:54; ரோமர் 1:4,5; 1யோவான் 4:15; 1 யோவான் 5:7; வெளி 2:18; சங்கீதம் 2:7,12.
யோவான் சுவிசேஷம்:
யோவான் சுவிசேஷத்தை எழுதிய ஆக்கியோன் இந்த சுவிசேஷம் எதற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறார். இயேசு கிறிஸ்து எதற்காக வந்தாரோ அதனைதான் சுவிசேஷகரும் தெரிவிக்கின்றார். யோவான் 3:16 ல் இந்த அடிப்படை உண்மையை தெரிவிக்கின்றார். நான் கதை எழுதவரவில்லை, வரலாற்றில் வரலாற்றின் தேவன் தமது குமாரனாகிய கிறிஸ்து மூலம் செய்த இரட்சண்ய கிரியையே எழுத வந்தேன் என்றுக் குறிப்பிடுகின்றார்.
முதலாவது, இயேசுவை கிறிஸ்து என்றும், இரட்சகர் என்றும், ஆண்டவர் என்றும், கர்த்தர் என்றும், தேவன் என்றும் எழுதிய யோவான் இப்பொழுது இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அழுத்தமாகக் கூறுகின்றார். யோவான் 1 ஆம் அதிகாரத்திலேயே இந்த உண்மை வெளிபட்டிருந்தாலும் இயேசுவை தேவனுடைய குமாரனாக காண்பிக்கும்படியாகவும், வெளிபடுத்தும்படியாகவும், பிரசங்கிக்கும்படியாகவும் எழுதுகிறேன் என்று கூறுகின்றார். இந்த நூலை வாசிக்கின்றவர்கள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும். அவரை கண்டிருந்தாலும் காணாதிருந்தாலும், அவரை அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் அவரை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும். இதனை வாசிக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக வேண்டுமானால் இயேசுவை தேவனுடைய குமாரனாக விசுவாசித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அவரை தேவனுடைய குமாரனாக ஏற்றுக்கொள்ளாமல் நாம் அவருடைய காணியாட்சிக்குள் நுழைய இயலாது. மேலும் இந்த விசுவாசமே அடுத்த நிலைக்கு கொண்டு போகிறது.
இரண்டாவது இயேசுவை தேவனுடைய குமாரனென்று விசுவாசித்து அவரின் சரீரமாகிய சபைக்குள் – காணியாட்சிக்குள் வரும்போதுதான் மறுமைக்குரியதும், அழியாமைக்குரியதும், பரலோகத்துக்குரியதும் , புதிய பூமிக்குரியதுமான நித்திய ஜீவனை பெறுகின்றோம். நித்திய ஜீவன் என்பது நிலைத்திருப்பதும் மற்றும் அழிவில்லாததுமாகும். மரணம் என்பது பூமிவாழ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். நித்திய ஜீவன் என்பது முடிவுற்ற இவ்வுலக வாழ்க்கையை மறு இஉலகில் வாழ்வதற்கு கொண்டு போவது ஆகும். ஒவ்வொரு மனிதனையும் இந்த அழிவில்லாத உலகிற்கு கொண்டு வருவதற்காகதான் பாடுகளினூடேயும், வேதனைகளினூடேயும், இழப்புகளினூடேயும் இந்த சுவிசேஷத்தை எழுதி வைத்தார். இதை வாசித்தும் விசுவாசிக்காமலிருப்போர் இவ்வுலக சபையில் நிலை நிற்கலாம். ஆனால் மரணத்துக்கு பின்பு நிலை நிற்கவும் முடியாது, அழியாமையை பெறவும் இயலாது.
எழுதப்பட்ட நூலை வெறும் எழுத்தேடுகளாக அல்ல, ஜீவ எழுத்தேடுகளாகவும், புனித எழுத்தேடுகளாகவும் கொண்டிருந்து நித்திய ஜீவன் நோக்கி பயணிப்போமாக.
இதனை கையினாலும், மையினாலும் காகிதத்தில் எழுதப்பட்டவைகளாக கருதாது, இருதய பலகையில் ஆவியால் எழுதப்படும்படி தரப்பட்ட எழுத்தேடுகளாக கருதுவோம். ஜெயமெடுப்போம்.
ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். 1யோவான் 1:1-4.
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:6-13.