நான் தெரிந்துக் கொண்டவர்களை அறிவேன்.
I do not speak concerning all of you. I know whom I have chosen. (John 13:18)
John13:11; John 15:16; John 17:12; John 21:15-17; 2Corinthians 4:4-6; Hebrews 4:13; 2Timothy 2:19; Revelation 2:23; Proverbs 29:1; Daniel 12:2,3,10.
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்: ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். (யோவான் 13:18)
யோவான் 13:11; யோவான் 15:16; யோவான் 17:12; யோவான் 21:15-17; 2கொரிந்தியர் 4:4-6; எபிரெயர் 4:13; 2தீமோத்தேயு 2:19; வெளி2:23; நீதிமொழிகள் 29:1; தானியேல் 12:2,3,10.
அவர் அவருக்குரியவர்களை அறிவார்:
கர்த்தராகிய இயேசு பிதாவினிடத்திலிருந்து வந்தவராகையினால் அவர் தேவனுக்குரியவர். இந்த உலகில் உள்ள யாவும் அவரிடமிருந்து வந்ததினால் எல்லாம் அவருடையவைகள். பூமிவாழ் மனுக்குலம் அவரால் பிறப்பிக்கபட்டதினால் அவரை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் எல்லாரும் அவருக்குரியவர்களே. அப்படியிருக்க தேவனாகிய அவருக்கு தெரியாமல் நன்மையானாலும் தீமையானாலும் நடப்பதில்லை. நல்லவர்களையும் கெட்டவர்களையும் அவர் அறிவார்.
அவருக்குரியவர்களையும் அல்லாதவர்களையும் அவர் அறிவார். எனவே பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் உரியவர்களை தமது குமாரனாகிய இயேசுவிடம் ஒப்புக்கொடுத்துள்ளார். ஆகையினால் அவருக்குரியவர்கள் யாரென்று நன்றாக அறிந்துள்ளார்.
1சாமுவேல் 16 ஆம் அதிகாரத்தில் சகோதரர் நடுவிலிருந்த தாவீதை மட்டுமே தெரிந்துகொண்டார். 7 ஆம் வசனத்தில் மனுஷர் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப்பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தை பார்க்கிரார் என்று சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்து தமக்கு பிதாவினால் தரப்பட்டுள்ளவர்களை அறிவார். அவருக்கு யாரும் கற்பிக்க வேண்டியதில்லை. பிதாவினால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அவருக்குரியவர்களாகின்றார்கள். அவர்களே அவரின் இரத்தத்தால் மீட்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இணைக்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாயிருக்க அவர்கள் பிதாவினால் முன்குறிக்கப்பட்டு இயேசுகிறிஸ்துவினால் தெரிந்துகொள்ளப்பட்டார்கள். இயேசுவுக்கு ஊழியம் செய்ய பலர் முன் வரலாம். எல்லாரும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாயிருக்க இயலாது. அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விழுந்தாலும் எழுந்து நிமிர்ந்து நிற்கவைக்கபடுவார்கள். இயேசுவின் சீஷர்களில் பலர் அவரின் உபதேசத்தின் கடினதன்மையை அறிந்து அவரைவிட்டு பின்வாங்கிப்போனார்கள். நித்திய வாழ்வுக்கென்று முன்குறிக்கப்பட்டவர்களோ நிலைத்து நின்றார்கள். அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சபைகளில் நிலைத்திருப்பர். அல்லாதோர் பின்வாங்கிப்போவார்கள்.
அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். யோவான் 6:65-70.