நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
I have given you an example, that you should do as I have done to you. (John 13:15)
Matthew 11:29,30; Matthew 23:11; Luke 10:37; John10:4; Romans 15:5,6; 1Corinthians 9:19; 2Corinthians 4:5; Galatians 6:2; Philippians 2:4,5; II Thessalonians 3:9; 1Peter 2:21; 1Peter 3:16,17; 1Peter 5:1-4; 1John2:6.
நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். (யோவான் 13:15)
மத்தேயு 11:29,30; மத்தேயு 23:11; லூக்கா 10:37; யோவான் 10:4; ரோமர் 15:5,6; 1கொரிந்தியர் 9:19; 2கொரிந்தியர் 4:5; கலாத்தியர் 6:2; பிலிப்பியர் 2:4,5; 2தெசலோனிக்கேயர் 3:9; 1பேதுரு 2:21; 1பேதுரு 3:16,7; 1பேதுரு 5:1-4; 1யோவான் 2:6.
மாதிரி என்பது என்ன?
மாதிரியை காண்பிக்கவே இயேசுகிறிஸ்து தாழ்நிலையைத் தெரிந்துக்கொண்டார். உயர்ந்தவர் தாழ்ந்த நிலைக்கு சென்று கற்பிப்பதே சிறந்த மாதிரியாகும்.
ஊழியங்களின் உன்னத நிலை பேராயர் என்பதாகும். இந்த நிலை கடை ஊழியனாக இருந்து பணி செய்கிறானா இல்லையா என்பதை சோதித்து பார்க்கவே வைக்கப்பட்டுள்ளது. பேராயர் என்பது பாடுகளினால் கிழிபட்ட ஆடையோடும், கண்ணீரோடும், அதிகாரத்தையும் தாழ்மையும் வெளிபடுத்தும் பெரிய சிலுவையை சுமப்பதாகும்.
குடும்பதலைவன், தலைவி என்பவர் பந்தா காண்பிப்பதற்கானதல்ல. குடும்ப வளர்ச்சிக்காக, பிள்ளைகளுக்கு நல்ல குணங்களை கற்றுகொடுக்க வியர்வையினாலும், வருத்தங்களினாலும் நிறைந்து ஒரு கடையனைபோல செயல்படுவதற்கான பதவி. பிள்ளைகளுக்கான உயிர் மாதிரிகள்.
சபை போதகர், மூப்பர்கள் போன்றோர் கிறிஸ்துவின் தன்மைகளை வெளிபடுத்தவேண்டி தேவனால் வைக்கப்பட்டுள்ள தேவலோக பாத்திரங்கள். இந்த பாத்திரங்கள் சுத்தமாகவும், வெண்மையாகவும், தெளிவான மனசாட்சியுடையதாகவும் முன்வைக்கப்பட எப்பொழுதும் பயன்படுத்தப்படுகின்ற பாத்திரங்கள். இவர்கள் கற்பிக்கும் மாதிரிகளே சபையில் காணப்படும். இவர்கள் பலிபீடத்தில் நிற்பதினால் பலிபீடத்திலிருந்து மாதிரி நதி புறப்பட்டு சபை ஜனங்களுக்குள் மாதிரிகளை உருவாக்க வேண்டும். அதிக ஆக்கினை அடைவோம் என்று உங்களில் அநேகர் போதகர் ஆகாதிருப்பீராக.
மாதியாக இருக்க அழைக்கப்பட்டுள்ளவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் விசுவாசிகளே. இவர்கள் பாவிகள், துன்மார்க்கர், பொல்லாதவர் ஆகியோரின் கூட்டத்தின் நடுவில் உலாவுகிறவர்கள். அவர்களிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ளாமல் சபையிலிருந்து கற்றுக்கொள்கிற மாதிரிகளை உலகத்துக்கு கொண்டுபோகிற விளக்குகள். இவர்களிலிருந்து மாதிரி வேர்கள் புறப்பட்டு அப்பகுதியை தூய்மையாக்கும்.
மாதிரி என்பது பின்னால் மறைந்திருக்கும், தூக்கி முன்வைக்கப்பட்டால் ஒளிரும்.
மாதிரி என்பது தான் வாழ வேண்டுமென்றல்ல பிறர் வாழ வேண்டும் என்ற மனநிலை கொண்டிருக்கும். மாதிரி என்பது இல்லாமையிலும் மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும் வாழ தலைப்படும்.
மாதிரி என்பது விட்டு கொடுக்காது, எளிதில் விட்டு விலகும். மாதிரி என்பது தன்னை முன்னிறுத்தாது, பிறரை முன்னிறுத்தி வளர்த்துவிக்கும். அதிகம் பேசாது, பேச ஆரம்பித்தால் அதை ஜெயிக்க முடியாது.
கிறிஸ்துவின் மாதிரியை ஜெயித்தவர்கள் ஒருவருமில்லை. உன்னில் அது இருக்குமானால் ஒருவராலும் உன்னை ஜெயிக்கமுடியாது.
மாதிரி என்பது கல்வியில், பணத்தில், பதவியில் அல்ல குணங்களில் உண்டாகும் மாற்றம். மாதிரி என்பது தனக்குள் சிறு குற்றத்தைகூட வைத்திருக்க அனுமதிக்காது. உள்ளம் குத்தப்படும். கிறிஸ்துவில் அனுதினம் ஒப்புரவாகும். இன்னும் நிறைய உண்டு.
இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 1பேதுரு2:21-25.