நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே.

And He Himself is the propitiation for our sins. (1John 2 :2)

1John 1:7; 1John 4:10; 1John 3:5,16; Romans 3:25,26; 1Peter 2:24; 1Peter 3:18; Exodus 25:17; John 3:17.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

1யோவான் 1:7; 1யோவான் 4:10; 1யோவான் 3:5,16; ரோமர் 3:25,26; 1பேதுரு 2:24; 1பேதுரு 3:18; யாத்திராகமம் 25:17; யோவான் 3:17.

இயேசுவே கிருபாதார பலி.

இந்த புத்தகத்தை வாசிக்கிறவர்களின் பாவத்தை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி இயேசு கிறிஸ்துவே. கிருபாதார பலி எனும்போது கிருபை உண்டாக செய்யும் பலியானார் என்றும், சினம் தணிக்கும்படி பலியானார் என்றும், நல்லிணக்கம் உண்டுபண்ணும்படியான பலியானார் என்றும், அமைதிப்படுத்தும் பலியானார் என்றும் பொருள்படும். இந்த புத்தகத்தை வாசிக்கிறவர்கள் செய்த குற்றத்திற்கு – பிழைக்கு – அக்கிரமத்துக்கு பரிகாரம் செய்யும் பலியானார் என்று பொருளாகின்றது.

பழைய ஏற்பாட்டின் கிருபாசனத்தோடு தொடர்புடைய சொல்லாக இது காணப்படுகிறது. பாவத்தினிமித்தம் தேவன் கோபம் கொள்கிறவர் மட்டுமல்ல, பாவத்தை பரிகரிக்கிறவரும்கூட. பாவத்துக்கு முடிவுண்டாக்குகிறவரும்கூட. பாவம் செய்யும் உணர்வு கொண்டிருக்கிறவர்களை பரிகரிக்க இயேசு கிறிஸ்துவால் ஒன்றும் செய்ய முடியாது. பாவத்தினிமித்தம் வருந்துகிறவர்களின் பாவங்களை பரிகரிக்க அவரால் மட்டுமே முடியும். தேவனிடம் கோபம் மட்டுமல்ல, இரக்கம் அன்பு கலந்த கிருபையும் உள்ளது. கோபத்தினிமித்தம் அடித்தார். கிருபையினிமித்தம் தோலுடை கொடுத்தார். காயம் கட்டுகிறார். அந்த கிருபையின் வெளிப்பாடுதான் இயேசு கிறிஸ்து தம்மை பலியாக ஒப்புக்கொடுத்ததாகும். கிருபையோடு வெளிப்பட்டதினால் – இரக்கத்தோடு வெளிப்பட்டதினால் – அன்போடு வெளிப்பட்டதினால் அவர் கிருபாதார பலி எனப்படுகிறார்.

நம்முடைய பாவங்களை என்று சொல்லியிருப்பதை இஸ்ராயேலரின் பாவங்களை என்றும் பொருள் கொள்ள முடியும். ஏனெனில் இஸ்ராயேலர் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததினிமித்தம் பிரமாணங்களினால் உண்டான பாவங்களோடு இந்த பாவத்தையும் கூட்டிக்கொண்டனர். ஆனாலும் இஸ்ராயேலர் மீட்கப்பட வேண்டும் என்பது தேவனுடைய விருப்பமாயிருப்பதினால் அவர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செய்த அக்கிரமங்களை நினைத்து மனம் வருந்தி இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வார்களானால் அவர்களின் பாவங்களும் பரிகரிக்கப்படும். இந்த புத்தகத்தை வாசிக்கிறவர்கள் எவர்களாயிருந்தாலும் அவர்களை மீட்டெடுப்பது அவரின் நோக்கமாகும்.

இயேசு கிருபாதார பலியாக இருப்பதினால்….
நற்கிரியைகளை செய்து, புண்ணியம் நாடி மீட்படைய முயற்சிக்க வேண்டியதில்லை…
மனிதர்களின் மீட்புக்கு இயேசுவைதவிர வேறு மார்க்கமில்லை…
நியாயபிரமாணம் உரிமைகோரும் பலிகளை செலுத்த வேண்டியதில்லை…
எத்தகைய பாவம் செய்தவராயிருந்தாலும் மன்னிப்பும், மீட்பும் உண்டு….
மீட்கபடுகிறவர்களை தேவன் முன்னறிந்துள்ளார் என்பதை மறுக்க இயலாது…

சில கேள்விகள்…..
தொடர் பாவங்கள் இயேசுவை மறுபடியும் சிலுவைக்கு கொண்டுபோகும் என்பதை அறிவீர்களா?
பாவங்கள் நிவிர்த்தி செய்யப்பட்டும் பாவம் செய்கிறவர்கள் மீட்பை இழந்து அவலமானவர்கள் என்பது தெரியுமா?..
பிதாவாகிய தேவன் தம் மகனை திரும்பவும் சிலுவைக்கு ஒப்புக்கொடுக்க துணிவாரா? அல்லது பாவம் செய்கிறவர்களை தண்டிக்க துணிவாரா?

என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். ஏசாயா 40:1,2..

பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம். எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும். சங்கீதம் 79:8,9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME