நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
And by this we know[fn] that we are of the truth, and shall assure our hearts before Him. (1John 3:19)
Hebrew 6:10,11; hebrew 11:13; 2Timothy 1:12; Romans 14:20,21; Romans 8:38,39; John 13:35; John 18:37; Isaiah 32:17.
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். (1 யோவான் 3:19)
எபிரெயர் 6:10,11; எபிரெயர் 11:13; 2தீமோத்தேயு 1:12; ரோமர் 4:20,21; ரோமர் 8:38,39; யோவான் 13:35; யோவான் 18:37; ஏசாயா 32:17.
பூரண நிச்சயம்.
18 ஆம் வசனத்தின் அடிப்படையில் தன்னைத்தானே தீர்மானித்துக் கொள்வதைக் குறிப்பிடுகின்றார். உள பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், செயல்பூர்வமாகவும் அன்பு கூருகிறவன் தான் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவன் என்பதை அறிகின்றான். இந்த அறிவு அவனின் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்படுகின்றது. உளபூர்வமாக இதனை உறுதிப்படுத்திக்கொண்டதினால் அவன் இரு காரியங்களை தீர்மானிக்கின்றான். தான் செய்வது தவறாக இருக்காது, தான் பேசுவது தவறாக இருக்காது என்றும், அப்படி தவறுகள் காணபடுமானால் அதை தன் பலவீனமாக ஒப்புக்கொண்டு தேவனிடத்தில் இரக்கம் கேட்கின்றவனாகவும், தேவனுடைய தீர்ப்புக்கு தன்னை ஒப்புக்கொடுத்து தன்னை சரிபடுத்திக் கொள்கிறவனாகவும் காணப்படுகின்றான்.
இந்த செயற்பாடுகள் இந்த மனிதனை தேவனுக்கு முன்பாக செம்மையானவனாக நிறுத்துகின்றது. தன் இருதயத்தை தேவனிடம் திறந்து காணபித்து தன்னை ஆராய்ந்து பார்க்கின்றவனாகவும் இருக்கின்றான். தேவன் தன்னை ஆராய்ந்துப்பார்க்கும்படியாகவும் விரும்புகின்றான். இப்படிபட்டவன் அவருடைய ஜனத்தாரின் முன்னிலையில் ஒளிவு மறவற்றவனாக – வெளிப்படை தன்மையுடையவனாக காணப்படுவான். எவனொருவன் தன் பலவீனங்களைக் குறித்து பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றானோ அவன் உள்ளம் தேவன் முன்னிலையில் உறுதிபட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பவுல் தன் பலவீனங்களை குறித்து மேன்மைபாராட்டியதும் இதனாலே.
இரட்சிக்கிப்பட்டேன் என்ற நிச்சயம் உள்ளவன் இரட்சிக்கப்படுதலின் தொடர் செயலுக்கு தன்னை முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும். ஒரு மனிதன் தன் இருதயத்தை மூன்று இடங்களில் சோதித்துப்பார்க்க முடியும். கர்த்தரின் வசனத்தின் அடிப்படையிலும், தேவனுடைய ஜனத்தின் முன்னிலையிலும், தேவனை அறியாத ஜனங்களின் நற்சாட்சியின் அடிப்படையிலுமே. ஆதிசபையார் ஜனங்களிடையில் நற்சாட்சி பெற்றிருந்தார்கள். அன்புகூருதல் என்பது ஒளிவு மறைவற்றவனாய் தன்னை பிறருக்கு காண்பித்தலே ஆகும். இதில் குறைபாடு இருக்குமானால் தன் இருதயத்தை நிச்சயபடுத்திக்கொள்வதிலும் , பிறர்மீதும் தேவன் மீதும் காட்டும் அன்பிலும் மிகுந்த குறைபாடுள்ளது என்று கருதலாம்.
கேள்வி… தன் இருதயத்தை ஆய்ந்து நிதானிக்க இயலாதவன் பிறருக்கு எவ்விதம் போதகனாயிருக்க முடியும்?
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரேயர் 10:19-23.