அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்.
When He comes, He will tell us all things. (John 4:25)
Jn4:29,39; jn14:26; jn15:15; jn16:13,30; jn18:4; jn21:17; Acts20:26; 1Cor2:10,15; Deu1:18; Deu18:15-18; 1Sa9:19; 1Ch29:12; 2Ch32:31; Pr5:21; Ecc11:5; Isa44;24.
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். (யோவான் 4:25)
யோவான் 4:29,39; யோவான் 14:26; யோவான் 15:15; யோவான் 16:13,30; 18:4; யோவான் 21:17; அப்போஸ்தலர் 20:26; 1கொரிந்தியர் 2:10,15; உபாகமம் 1:18; உபாகமம் 18:15-18; 1சாமுவேல் 9:19; 1நாளாகமம் 29:12; 2நாளாகமம் 32:31; நீதிமொழிகள் 5:21; பிரசங்கி 11:5; ஏசாயா 44;24.
இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையில் மனுக்குலம் மீட்கப்படுதல், தேவனுக்கும் மனிதருக்கும் தொடர்பு உண்டாக்குதல், பாவம் நிறைந்த உலகத்தின் அழிவு, மனுக்குலத்தின் புதிய புனரமைப்பு போன்ற காரியங்களை குறித்து யாவற்றையும் அறிவித்திருந்தார். இவைகளை குறித்த காரியங்களை மேலும் அறியவும், தமது திருப்பணியை தொடர்ந்து செய்யவுமே சபையையும், ஊழியகாரர்களையும், ஊழியங்களையும் ஏற்படுத்தினார். இயேசுகிறிஸ்து மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அறிகிறவர்(யோவான் 2:24,25) மட்டுமல்ல, மனிதரையே அறிகிறவர். ஒரு மனிதரை பார்க்கும்போதும் அறிகிறார், அம்மனிதரைப் பார்க்காமலும் அவனை குறித்தும் அறிகின்றார். இந்த மேசியா ஞானம் தீர்க்கதரிசி அல்லது தீர்க்கதரிசனம் என்ற களத்திலேவைத்து பார்க்கபடுகின்றது.
அவர் ஒரு தீர்க்கதரிசி என்று பல இடங்களிலே குறிப்பிடபட்டுள்ளது( மத்தேயு 16:14; மத்தேயு 21:11,46; மாற்கு 6:15; மாற்கு 8:28; லூக்கா 7:16,39; லூக்கா 9:8,19; லூக்கா 24:19; யோவான் 4:19; யோவான் 6:14; யோவான் 7:40; யோவான் 9:17) இயேசுகிறிஸ்து வந்துவிட்டார் என்பது உண்மையெனில், அவர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்பதும் உண்மையே.
இயேசுகிறிஸ்துவின் போதனைகளும், ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் முழு மனுக்குலத்துக்கும் போதுமானது. பரிசுத்த ஆவியானவரும் தமது சுயமாய் ஒன்றும் பேசாமல் கிறிஸ்துவையும், அவர் செய்கைகளையும், அவர் போதனைகளையுமே மாத்திரம் அறிவிக்கின்றார்.
சமீபகால கிறிஸ்தவம் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவின் உபதேசத்திலும் வெளிபடுத்தபட்டுள்ளவைகளுக்கு மாறாக கிறிஸ்தவத்தை பரப்ப குர்ரானையும், வேதங்களையும், புராணங்களையும், சித்தர் நூல்களையும் ஆய்ந்து கொண்டிருக்க முயற்சிப்பது வெட்ககேடானது.
எழுத்திலும், ஓசையிலும், வடிவத்திலும் ஒன்றுபோல் காணப்படுகிறவைகளை கொண்டு ஆராய துடிப்பது விவிலிய தியானத்தை மட்டுபடுத்துவதும், விவிலியத்தோடு தீட்டானவைகளை கலக்க நினைப்பதுமான தவறுகளுக்கே வழிவகுக்கும்(மத்தேயு 5;17,18,19; வெளி 22:18,19).
சமீபகால தமிழ் கிறிஸ்தவ பெருந்தலைகளே இம்முறைகளை விட்டு விடுவீர்.
இரட்சிக்கப்பட்டேன் என்று கூறும் பிராமணர்கள் ஏன் மறுபடியும் விட்டுவந்த புராணங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். இவர்களின் மீட்பு கேள்விக்குரியதாகும்.
அவர் எல்லாவற்றையும் 4 சுவிசேஷங்களிலும் அறிவித்து விட்டார். அவைகளை தற்சமயம் சபைகளில் தொனிக்க செய்கிறார்.
நில், கவனி, பின்பற்று, பறைசாற்று.
கர்த்தாவே, உம் வார்த்தைகளை தவிர வேறு எவைகளில் நீர் உம் நித்திய ஜீவனை வைத்துள்ளீர்? உம் குமாரனாகிய கிறிஸ்துவில் நீர் எங்களுக்கு கற்று கொடுத்துள்ள பாடங்களே எங்கள் வாழ்விற்கான வாழ்க்கை பாடங்கள். நாங்கள் அவைகளிலே உறுதியாய் நின்று உம்மை பின்பற்றி வாழ எங்களுக்கு பேரருள் புரிவீராக.