தேவனிடமிருந்து வந்தவராகிய இவரே பிதாவைக் கண்டவர்.
Not that anyone has seen the Father,except He who is from God;He has seen the Father. (John 6:46)
Jn1:18; Jn5:37; Jn7:29; Jn8:19,55; Jn14:9,10; Jn15:24; Lk10:22; Col1:15; 1Tim6:15,16; 1Jn4:12.
தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
(யோவான் 6:46)
யோவான் 1:18; யோவான் 5:37; யோவான் 7:29; யோவான் 8:19,55; யோவான் 14:9,10; யோவான் 15:24; லூக்கா 10:22; கொலோசெயர் 1:15; 1தீமோத்தேயு 6:15,16; 1யோவான் 4:12.
இயேசுவே பிதாவை கண்டவர்:
இவ்வசனம் இயேசு மட்டுமே பிதாவின் பிரதிநிதியாய் இருக்கிறார் என்பதை அறுதியிட்டு கூறுகின்றது.
எந்த மதமும், இனமும் இயேசுவுக்கு நிகரில்லை. தேவனை வெளிபடுத்துவதில் இயேசுவும் ஒருவர் என்பதை இது நிராகரிக்கின்றது.
இயேசு கிறிஸ்து.
– பிதாவினிடத்தில் இருந்தவர்.
– பிதாவை கண்டவர்.
– பிதாவை அறிந்தவர்.
– பிதாவினால் உலகிற்கு அனுப்பபட்டவர்.
– பிதாவை வெளிபடுத்துகிறவர்.
– பிதாவிடம் சென்றிருப்பவர்.
– பிதாவிடமிருந்து மறுபடியும் வரப்போகிறவர்.
– பிதாவிடம் கூட்டி சேர்க்கிறவர்.
இவர்தான் பிதாவை கண்டவர். உலகில் எவரும் பிதாவாகிய தேவனை காணவுமில்லை, அறியவுமில்லை, வெளிப்பாடுகளை பெற்றிருக்கவுமில்லை.
உண்மை ஒன்றுதானுண்டு, பொய்ம்மைகளோ ஏராளம்.
பிதா ஒருவர் மட்டுமே. அப்படியானால் இயேசுவும் ஒருவர் மட்டுமே.
பிதாவின் சத்தம் கேட்டு உலகிற்கு கூறிய பக்தர்கள் விவிலியத்தில் மட்டுமே உண்டு.ஆனால் அவர்கள் அவரை காணவில்லை. இயேசுவோ பிதாவிடமிருந்து வந்தராகையினால் அவரே பிதாவை கண்டவர்.
நாம் பிதாவை காண வேண்டுமானால் கிறிஸ்துவோடு இணைந்துவாழ கற்றுகொள்ள வேண்டும்.
குமாரனை அறிந்தவன் பிதாவை அறிகின்றான்.
குமாரனை கண்டவன் பிதாவை காண்கின்றான்.
குமாரனோடு வாழ்கிறவன் பிதாவோடு வாழ்கிறான்.
குமாரனின் சத்தம் அறிந்தவன் பிதாவின் சத்தமும் அறிகின்றான்.
இக்காலத்தில் இயேசுவை தவிர எதையும், எவரையும் பின்பற்ற தகுதியில்லை.
இந்நிலை மாற வேண்டும்.
பிதாவை கண்டு குமாரன் வாழ்ந்தார். குமாரனை கண்டு நாம் வாழ வேண்டும். நம்மை கண்டு பிறர் வாழ வேண்டும்.
கர்த்தாவே, உம்மை நீர் உமது மகனுக்கு மட்டுமே வெளிபடுத்தினீர் என்று நாங்கள் கண்டு, கற்று, அறிந்து நிச்சயித்திருக்கிறோம். ஆகவே கிறிஸ்துவை தவிர்த்தவைகளில் எங்கள் நேரங்களையும், பொருள்களையும் வீணாய் விரயம் பண்ணாமலிருக்க உதவிடும்.