துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸிடம் கொடுத்தார்

துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸிடம் கொடுத்தார்.

Jesus answered,It is he to whom I shall give a piece of bread when I have dipped it. (John 13:26)

John 13:30; Matthew 26:23; Mark 14:19,20; Luke 22:21; John 6:70,71; John 12:4-6; 2Kings 5:25; Ps41:9; Proverb 29:1; Jer7:10.

இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். (யோவான் 13:26)

யோவான் 13:30; மத்தேயு 26:23; மாற்கு 14:19,20; லூக்கா 22:21; யோவான் 6:70,71; யோவான் 12:4-6; 2இராஜாக்கள் 5:25; சங்கீதம் 41:9; நீதிமொழிகள் 29:1; எரேமியா 7:10.

துணிக்கை பெற்ற யூதாஸ்:
கர்த்தராகிய இயேசுவினால் குறிப்பிடப்பட்ட மனிதனை யோவானுக்கு அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்தபட்ட முறைமை. இது பஸ்கா முறைமையாக செய்யப்பட்டதா என்ற கேள்வி சீஷர்களுக்குள் எழும்பாததினால் கர்த்தராகிய இயேசு பஸ்கா முறைமையிலேயே துணிக்கையை யூதாஸுக்குக் கொடுத்தார்.

தேவன் மனிதர்க்கு தருவதெல்லாம் நன்மையானதாகவே இருக்கிறது என்பது நமது நம்பிக்கை. அதேவேளையில் காரிருளில் தம்மை மறைத்துக்கொண்டிருப்பவர், சவுலுக்கு தீமையின் ஆவியை அனுப்பினவர், நாம் அவருடைய பாதையை விட்டு விலகிச் செல்லும்போது இடறுதலின் ஆவியையும், தீமையின் ஆவியையும், பலவீனத்தின் ஆவியையும், மரண ஆவியையும் இன்னும்பல நமக்குள் அனுப்புகிறார் என்பதை மறந்துவிட வேண்டாம். அன்பின் தேவனின் மறுபுறம் நீதியும் இருக்கிறது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அனனியா – சப்பீராளுக்கு நேர்ந்த துயரம், நற்கருணையை செம்மையாய் பயன்படுத்தாதவர்கள் பலவீனப்பட்டு நித்திரையடைந்த நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கையாகவே எழுதப்பட்டுள்ளது.

ஒருவனை நன்மைகாகவும், பிறிதொருவனை தீமைக்காகவும் பயன்படுத்துகிறார். நன்மை செய்கிறவனும் தேவனின் பணியாள்தான், தீமை செய்கிறவனும் தேவனின் பணியாள்தான். அவனவனுக்குரிய கூலி நியாயதீர்ப்பின் நாளில் கொடுக்கப்படும்.

யூதாஸ் ஒரு வில்லன் அல்ல, தேவனுடையவர்களே விழுந்துபோவார்கள் என்பதற்கான சிறந்த பாத்திரம்.

இப்படியிருக்க தன்னை நிற்கிறவன் என்று எண்ணிக் கொள்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன். 1கொரிந்தியர் 10:10.

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். 1கொரிந்தியர்3:10-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME