தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள்.
another Scripture says,They shall look on Him whom they pierced. (John 19:37)
Psalms 22:16,17; Zechariah 12:10; Revelation 1:7; Psalms 34:5; Habakkuk 1:5; Acts 3:1-10; 1John 1:1; 1Corinthians 1:24-31.
அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. (யோவான் 19:37)
யோவான் 22:16,17; சகரியா 12:10; வெளி 1:7; சங்கீதம் 34:5; ஆபகூக் 1:5; அப்போஸ்தலர் 3:1-10; 1யோவான் 1:1; 1கொரிந்தியர் 1:24-31.
நோக்கிப்பார்த்தல்.
மனிதர் தேவனை நோக்கி பார்க்கும்படியாக தேவன் விரும்புகிறார். அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் அவருடைய கிரியைகளுக்கு உடனாளிகளாகின்றனர்.
பரலோகத்திலிருந்து வந்தவரும், பூலோகத்தை இரட்சிக்க போகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ராயேலர் ஏற்றுக்கொள்ளாமல் அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்து அவரை உபத்திரவப்படுத்துகின்றார்கள். இவ்விதம் உபத்திரவப்படுத்தபடுகிறவரே உபத்திரவப்படுத்துகிறவர்களின் உபத்திரவங்களுக்கு பரிகாரியாயிருக்கிறார் என்பதை விவிலிய வார்த்தைகளை கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.
அவரை குத்தி காயப்படுத்தி இம்சை செய்து மரணிக்க செய்தவர்கள், அவிசுவாசம் கொண்டவர்கள், அவரை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கினவர்கள் ஒருநாளில் அவரை தேடி நாடி தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பி அவரை நோக்கி கதறுகின்ற நாட்கள் வரும்.
விவிலிய சரித்திரத்தில் யோசேப்பை வேண்டாமென்று வெறுத்து விற்றுப் போட்டவர்களே காலம் நிறைவேறினபோது யாசகம் தேடி யோசேப்பை நாடினார்கள்.
இயேசுவை வேண்டாமென்று கூறிக்கொண்டும், கிறிஸ்தவத்தை அழிக்க வகை தேடும் கூட்டத்தாரும் இயேசுவை நாடி தேடும் காலங்கள் வரப்போகின்றது. தீமையின் மயக்கமும், பாவத்தின் ஆதிக்கமும் நன்மையையும், நல்லோரையும் வெறுக்கவும், பகைக்கவும் செய்கிறது. தீமை, பாவம் போன்றவைகளின் ஆதிக்கம் அடங்கும்போது வெறுத்தவர்களே வெறுத்தவரை நேசிக்க பின் தொடர வேகமெடுப்பார்கள்.
முத்துக்கள் மறைந்திருந்தாலும் அதன் அழகு கெட்டுபோவதில்லை. அதை விரும்புகிறவர்கள் வரும்போது அதன் ஒளி பிரகாசமடையும்.
நன்மை செய்கிறவர்கள் இல்லாதிருந்தாலும் நன்மை இந்த உலகத்தில் உள்ளது. நன்மையை விரும்புகிறவர்கள் எழும்பும்போது அதன் வலிமை பெரிதாயிருக்கும்.
இயேசுகிறிஸ்துவினிமித்தமும் அவர்மேல் வைத்துள்ள விசுவாசத்தினிமித்தமும் நாம் துரத்தப்பட்டாலும் வெறுக்கப்பட்டாலும் துன்புறுத்தப்பட்டாலும் நம்மை அவர்கள் தேடிவரும் காலம் வரும். நாம் நம் விசுவாசத்தையும், தெய்வ அன்பையும், சத்தியத்தின் மேலுள்ள பற்றையும், பரிசுத்தத்தையும் இழக்காதிருக்கும் பட்சத்தில் நாம் முளைத்தெழும்பி ஜொலிக்கக்கூடிய காலம் உண்டாகும்.
எவ்வளவு காயப்பட்டோமோ அவ்வளவாய் மேன்மையடைவோம். எவ்வளவாய் வெறுக்கப்பட்டோமோ அவ்வளவாய் நேசிக்கப்படுவோம்.
நம்மை குத்தினவரே நம்மிடம் குனிந்து வந்து பாதத்தைப் பிடித்துக் கொள்வார்கள்.
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள். அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.
இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்; பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ? என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள், பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்; உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 49:20-26.