சீஷர்கள் அவரை இயேசுவென்று அறியாதிருந்தார்கள்.
morning had now come, Jesus stood on shore; yet disciples did not know Jesus. (John 21:4)
John 20:14; Mark 16:12; Luke 24:15,16,31; Romans 3:17; 1Corinthians 1:21; 1Corinthians 3:16; 1Corinthians 12:1; 1Timothy 1:7; 1John 2:11; Revelation 3:3.
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். (யோவான் 21:4)
யோவான் 20:14; மாற்கு 16:12; லூக்கா 24:15,16,31; ரோமர் 3:17; 1கொரிந்தியர் 1:21; 1கொரிந்தியர் 3:16; 1கொரிந்தியர் 12:1; 1தீமோத்தேயு 1:7; 1யோவான் 2:11; வெளி 3:3.
விடியற்காலம்.
இஸ்ராயேலர்கள் இரவு நேரத்தை 4 சாமங்களாக பகுத்திருந்தனர். ஒவ்வொரு சாமமும் 3 மணி நேரங்களை கொண்டதாகும். அப்படியென்றால் 4 ஆம் சாமமாகிய அதிகாலைபொழுதில் 3 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்நிகழ்வு நடந்துள்ளதை அறிய முடிகின்றது.
இந்த அதிகாலை நேரம் பகலுக்குரிய ஆயத்த வேளையாகும். காலைகடன்கள், ஜெபதியானங்கள் ஆகியவற்றை இக்காலை பொழுதிலே முடித்துக்கொள்ள வேண்டும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். இயேசு கிறிஸ்துவும் இந்த அதிகாலை பொழுதிலே தம்முடைய சீஷர்களை காண்பதற்காக புறப்படுகின்றார்.
அதிகாலையில் தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள் என்ற விவிலிய வார்த்தைக்கு இணங்க இயேசு கிறிஸ்துவும் அதிகாலை பொழுதை தமது தந்தையோடு செலவிடுகிறவராக இருந்தார் என்பதை சீஷர்கள் அறிந்திருந்தும் உயிர்த்தெழுந்தவரை தரிசிக்க ஆயத்தம் ஆகாமல் வயிற்று பசியை போக்க முனைகின்றார்கள். மனித வாழ்க்கையில் உணவுபற்றாகுறை, உடல் களைப்பினிமித்தம் தூங்குதல் ஆகியவை தேவனுடைய மனிதர்கள் தேவனோடு நேரம் செல்விட தடைகளாக கொண்டிருக்கும் தடைகற்களாகும். தேவன் உணவு பற்றாகுறையை போக்குவதற்கு உடல் உழைப்பையும் அதினிமித்தமாக உணடாகும் களைப்பை போக்குவதற்காக இரவு நேர தூக்கத்தையும் ஏற்படுத்தி வைத்திருந்தும் தேவனை தேடுகிற அதிகாலை போழுதை உழைப்புக்கும் தூக்கத்திற்கும் பயன்படுத்தும் துர்பாக்கிய நிலைமையை கொண்டிருப்பது வேதனையே.
சீஷர்கள் தேவனோடு செலவிடும் நேரத்தை பசியாற்றும் உழைப்பை நோக்கி செல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர். தேவனை தேடுவதை விட்டுவிட்டதின் விளைவாக இயேசுவை இன்னாரென்று அறியாத துர்பாக்கியத்துக்குள் தள்ளப்பட்டார்கள். நம்மிலும் அனேகர் தேவனை தேடும் அதிகாலை பொழுதை பயன்படுத்தாததினால் இயேசுவையும், அவரது விருப்பத்தையும், அவரின் வாக்கியங்களின் மறைபொருள்களையும் அறியாதவர்களாக காணப்படுகின்றோம்.
விடியற்காலை பொழுதில் ஆண்டவர் இயேசு தம்முடையவர்களை தேடி வந்தது போல தேவனுடையவர்கள் ஆண்டவரை தேடி அவரிடம் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாம் அவரை நாடாது கடல்களிலும், படுக்கைகளிலும், புதர்களிலும், அறைகளிலும் பதுங்கிக்கொள்வோமெனில் அவர் நம்மை தேடி வருவார். ஆதாமை தேடிச் சென்ற பிதா, சீஷர்களை தேடிச் சென்ற குமாரன் என்பதை போல நம்மை தேடி அலையும் பரிசுத்த ஆவியானவருக்கு நெருக்குதலகளை கொடுக்காது கர்த்தாவே உம் சமூகமே எனக்கு இன்பமானது என்று செல்லி அவரை சந்திக்க ஆயத்தமாகுவோம்.
உன் தேவனை சந்திக்க ஆயத்தாமாகு.
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. சங்கீதம் 16:5-11.