சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம், புதிய கல்லறை இருந்தது.
where He was crucified there was a garden,a new tomb in which no one had yet been laid. (John 19:41)
John 20:15; Acts 2:36; Acts 4:10; 1Corinthians 1:23; 1Corinthians 2:2; 2Corinthians 13:4; Colossians 1:20; Colossians 2:15; Hebrews 6:6.
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. (யோவான் 19:41)
யோவான் 20:15; அப்போஸ்தலர் 2:36; அப்போஸ்தலர் 4:10; 1கொரிந்தியர் 1:23; 1கொரிந்தியர் 2:2; 2கொரிந்தியர் 13:4; கொலோசெயர் 1:20; கொலோசெயர் 2:15; எபிரெயர் 6:6.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு.
இயேசு சிலுவையில் அறையப்பட்டதின் கருத்துகளை மேற்சொன்ன வசனங்கள் குறிப்பிடுகின்றன. பாவியாக குற்றவாளியாக சிலுவையில் அறையபட்ட இயேசு தேவகுமாரனாக மரித்தார். ஒன்றும் இல்லாத நிர்வாண கோலத்தில் அறையப்பட்ட இயேசு எல்லாம் உடையவராக நிரூபிக்கப்பட்டார்.
நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார். நமது அக்கிரமங்களுக்காக அவர் மரித்தார். நமது மீட்புக்காக அவர் அடக்கம் செய்யப்பட்டார். நமது ஜீவனுக்காக அவர் உயிர் பெற்றெழுந்தார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை இருந்தது. இந்த தோட்டமும் கல்லறையும் சிலுவையில் அறையப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்ததாகவும், அது அரிமத்தியா ஊரான் யோசேப்புடையதாயிருந்தது என்றும் சுவிசேஷங்கள் கூறுகின்றது. மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசுவின் இறுதி காலத்தில் அவருக்காக ஒரு இடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. தலைசாய்க்க இடமில்லையே என்று அங்கலாய்த்த இயேசுவுக்கு ஒரு தோட்டத்தையும், ஒரு கல்லறையையும், ஒரு யோசேப்பையும் தேவன் ஆயத்தம் செய்திருந்தார். தேவனையும் மனிதனையும் சந்திக்க வைத்த கொல்கொதா மேட்டின் அருகில் தேவன் கல்லறை தோட்டத்தை ஆயத்தம் பண்ணி வைத்தார். இந்த காரியத்தினிமித்தமாகதான் முற்கால சபைகள் தேவனை ஆராதிக்கின்ற இடத்தின் அருகில் கல்லறை தோட்டங்களையும் கொண்டிருந்தது.
ஒன்றுமில்லாதவனுக்கு கூட தேவன் ஆயத்தம்பண்ணி வைத்துள்ளதை கிறிஸ்துவுக்குள் அமையும்போது அறிந்துக் கொள்கின்றான்.
இயேசுவை உலகிற்கு அனுப்பிய தேவன் கண்டுக்காம இருந்தவர் அல்ல, அவருக்காய் யாவற்றையும் ஆயத்தம் செய்து வைத்தார். அதைபோலவே கிறிஸ்துவுக்குள் மீட்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தேவன் தமக்கு சித்தமானபடி சகலவற்றையும் ஆயத்தம் செய்து வைத்துள்ளார். இதனை காணும் கண்களையும் அறியும் உணர்வையும் அவர் நமக்கு தந்துள்ள ஆவியினால் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.
தேவன் தமது குமாரனின் உடலை கல்லறைக்குள் ஆயத்தம் செய்ய விரும்பினார். எதற்காக? தமது குமாரனை உயிரோடெழுப்பும்படியாகவே. நமது மரித்துபோன முன்னோர்களின் உடல்களும் கல்லறையிலே வைக்கப்பட்டுள்ளது. எதற்காக? கர்த்தராகிய இயேசு வரும்போது அவர்கள் உயிர்பெற்றெழும்படியாகவே. ஆகவே ஒரு புது கல்லறை ஒரு புது வாழ்வுக்கான உண்மையை அறிவிக்கின்றது.
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 1கொரிந்தியர் 2:7-12. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1தெசலோனிக்கேயர் 4:13-17.