சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
But some of them went away to the Pharisees and told them the things Jesus did. (John 11:46)
Jn5:15,16; Jn9:13; Jn12:17,37; Lk16:30,31; Act5:25; Jer38:4; Phil1:12-18.
அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். (யோவான் 11:46)
யோவான் 5:15,16; யோவான் 9:13; யோவான் 12:17,37; லூக்கா 16:30,31; அப்போஸ்தலர் 5:25; எரேமியா 38:4; பிலிப்பியர் 1:12-18.
அறிவித்தார்கள்:
பெயர் குறிப்பிடாத சிலர் இயேசுவின் நற்பணிகளில் பங்கு பெற்றார்கள். இயேசுவின் அற்புதங்களைக் கண்டார்கள். இயேசு சொன்னவைகளைக் காது குளிர கேட்டார்கள். தாங்கள் கண்டதையும், கேட்டதையும் இயேசுவை நம்பாத, இயேசுவின் மேல் குற்றம் சுமத்துவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்களாகிய பரிசேயர்களிடம் அறிவித்தார்கள். இவர்கள் பரிசேயரால் அனுப்பப்பட்ட ஒற்றர்களா? அல்லது இயேசுவின் அற்புதங்களைக் குறித்த ஆர்வ மிகுதியினால் பரிசேயர்களிடம் அறிவித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இயேசு செய்த நற்கிரியைகள் எதிராளிகளிடம் அறிவித்ததினால் எதிராளிகளும் இயேசுவின் நற்கிரியைகளை மறுக்க இயலாத நற்செயல்களாய் மாறிற்று.
பவுல் பிலிப்பி சபைக்கு எழுதும்போது இதினாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுகிறேன் என்று பிலிப்பியர் 1:18 ல் கூறுகின்றார்.
அன்றுமட்டுமல்ல நற்கிரியைகளையும், நல்வார்த்தைகளையும் விரும்பாத – வெறுக்கின்ற ஒரு கூட்டம் மனித சமுதாயத்தில் இழையோடிக்காணப்படுகின்றது. இயேசுவின் சீஷர் கூட்டத்தில் அவரைக் காட்டிகொடுத்த யூதாஸ் உட்புகுந்திருந்ததுபோல நற்செய்தியின் அளவில்லா நற்கிரியைகளைச் செயல்படுத்தும் ஒவ்வொரு இடங்களிலும் சத்துருவினால் களைகளும் விதைக்கப்படுகிறது என்பதை நாம் மறுக்க வேண்டாம்.
இத்தியாதி களைகளின் ஆதிக்கம், சத்துருவின் சதியாலோசணைகள் அதீதமாக பெருகியிருந்தாலும் கிறிஸ்து மரணத்தையும், பாவத்தையும், சாத்தானையும் ஜெயித்து எழும்பியதுபோல எல்லா சதிகளையும் முறியடித்து ஜெயகொடியேந்தி ஜெயவீரராக இயேசு மத்திய ஆகாயத்தில் இறங்கி வருவார். ஒருவரும் இதனைத் தடுக்கவியலாது. அந்நிய கண்களல்ல, சொந்த கண்களாலேயே காண்போம்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரிந்தியர்15:57.