வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையில்
Then, the same day at evening, being the first day of the week, (John 20:19)
Mark 16:9; Luke 24:1; Acts 20:7; 1Corinthians 16:2; deu 16:16; Luke 18:12; Genesis 1:5; Psalms 90:4; 2Peter 3:8.
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். (யோவான் 20:19)
மாற்கு 16:9; லுக்கா 24:1; அப்போஸ்தலர் 20:7; 1கொரிந்தியர் 16:2; உபாகமம் 16:16; லுக்கா 18:12; ஆதியாகமம் 1:5; சங்கீதம் 90:4; 2பேதுரு 3:8.
வாரத்தின் முதல் நாள்.
ப.ஏ ன் காலத்தில் வாரங்களின் பண்டிகை காணப்பட்டது. வாரத்தின் இறுதி நாள் ஓய்வுநாலளாகவும், வாரத்தின் முதல் நாள் வெளிச்சத்தின் – மகிழ்ச்சியின் நாளாகவும் காணப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வாரத்தின் முதல் நாள் உயிர்த்தெழுந்ததினால் உயிர்ப்பின் நாளாகவும் அறியப்பட்டது. இயேசு கிறிஸ்து உயிர்த்த இந்த திருநாளில் கிறிஸ்தவர்கள் கூடி அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும், கபடற்ற இருதயத்தோடும் காணப்பட்டார்கள் என அப்போஸ்தலர் கூறுகின்றது.
சபை உருவாகி யூத சமயத்தினின்று மாறுபட்டதாய் எழுச்சியடைந்தபோது வாரத்தின் இறுதிநாளாகிய ஓய்வுநாளை விவிலிய தியானங்களின் நாளாகவும், வாரத்தின் முதல்நாளை அப்பம் பிட்குதலின் நாளாகவும் அனுசரிக்க துவங்கினர். நாட்கள் செல்ல செல்ல வாரத்தின் முதல் நாளே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் நாளாகவும், கொண்டாட்டத்தின் நாளாகவும் மாறியது. சபை வரலாற்றில் வாரத்தின் முதல் நாளே ஓய்வுநாளாக பரிணமித்தது. விவிலிய அடிப்படையில் வாரத்தின் இறுதி நாள் ஓய்வுநாளாகவும் அன்றைய தினம் விவிலியத்தை தியானம் செய்யும்படியாகவும் ஆதி சபை மாற்றிக்கொண்டதைப்போல தற்போதைய சபைகளும் மாற்றிக்கொள்ள முன்வருவது நல்லது. மேலும் வாரத்தின் முதல் நாளை மகிழ்ச்சியின் நாளாகவும், எழுச்சியின் நாளாகவும் கருதி அப்பம் பிட்டு ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்வது நல்லது.
ஆதிசபையில் வாரத்தின் முதல் நாள் காணிக்கை சேர்ப்பின் நாளாகவும், வீடுகள் தோறும் கூடிவருகிற நாளாகவும் அனுசரித்து வந்ததை அப்போஸ்தலரில் காண்கின்றோம். காணிக்கை என்பது எளியவர்களை போஜிக்கவும், கிறிஸ்துவின் பணியில் இருப்போருக்கு பயன்படும்படியாகவும் பயன்படுத்தப்பட்டது. எனவே இந்த நாளை சேர்ப்பின் பண்டிகை நாள் என்றும் கூறலாம். மேலும் இந்த நாளில் கிறிஸ்துவின் அடியவர்கள் இயேசுவின் நாமத்தில் ஒரே மனதோடும், ஒரே சிந்தையோடும் கூடிவந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளும் ஆதிசபையயின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. தங்கள் வருமானங்களின் ஒருபகுதியை கொண்டுவர தூண்டப்பட்டவர்கள் தாராளமாக கொண்டு வந்தார்கள். இதனால் சபையார் போஜிக்கப்பட்டனர், ஊழியர்கள் போஜிக்கப்பட்டனர், வறுமையில் இருந்த சபைகள் உதவி பெற்றது. எளியவர்கள் நினைவுகூரப்பட்டார்கள்.
ஆம் வாரத்தின் முதல் நாள் சண்டைபண்ணுகிறதும், போட்டிக்கொள்வதும் பிறரை அவதூறுபண்ணுகிறதுமான நாளல்ல, அது மகிழ்ச்சியின் நாள். அன்பை, மகிவை, ஐக்கியத்தை, உறவை பகிர்ந்துக்கொள்ளும் திருநாள்.
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். அப்போஸ்தலர் 2:39-47.