இரண்டு பேருடைய சாட்சி உண்மையென்று நியாயபிரமாணத்தில் எழுதியுள்ளது.
It is also written in your law that the testimony of two men is true.
(Jn8:17)
Mt18:16; 2Cor13:1; Heb10:28; 1Jn5:9; Rev11:3; Deu17:6; Deu19:15; 1Kin21:10.
இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. (யோவான் 8:17)
மத்தேயு 18:16; 2கொரிந்தியர் 13:1; எபிரெயர் 10:28; 1யோவான் 5:9; வெளி 11:3; உபாகமம் 17:6; உபாகமம் 19:15; 1 இராஜாக்கள் 21:10.
சாட்சியங்கள்:
எந்த ஒரு குற்றசாட்டுக்கும் போதுமான – நம்பகமான – நேரடி சாட்சியங்கள் தேவை என்பது வழக்கமான ஒன்று. முற்காலங்களில் சாட்சியங்களின் நம்பகதன்மை குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை. அதனால் குற்றங்கள் குறைவாகவும், செய்த குற்றங்களுக்கு விரைவான தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக குற்றங்கள் அதிகமாகவும், செய்த குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும், தீர்ப்புகள் விரைவில் வெளிப்படாமல் தேங்கியும் காணப்படுகிறது. குற்றம் செய்தவன் குற்றம் செய்யவில்லை என்று அழுத்திக்கூறும் போக்கும் அதற்கு பலருடைய ஆதரவும் பெருகி தீர்ப்புமையம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. இவ்விதமாக சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில் அல்லது சாட்சியங்கள் சாட்சிகூற முன்வராத பட்சத்தில் குற்றவாளியின் மனநிலையை பரிசோதித்து பார்த்து அறிந்து கொள்ளும் முறையும் வந்துள்ளது. என்றாலும் குற்றங்கள் அதிகரித்துகொண்டுதானிருக்கின்றன.
சாட்சியங்கள் இருந்தும் அவைகளை மறுக்கும் அணுகுமுறை அதிவேகமாக பரவி வருவதால் எல்லா இடங்களிலும் காப்பகங்களுக்கு பதிலாக தப்பகங்கள் அதிகரிக்கின்றன.
மனிதன் முகத்தை பார்க்கின்றான். தேவனோ இருதயத்தை ஆராய்ந்து பார்க்கின்றார். மனிதனின் சாட்சியங்கள் மறுக்கபட்டாலும் தேவனின் சாட்சி, ஆவியானவரின் சாட்சி, குமாரனின் சாட்சி, தூதர்களின் சாட்சி, பரிசுத்தவான்களின் சாட்சி ஆகியவை ஜீவனோடிருக்கின்றன.
இயேசுவை குறித்து பிதாவும், கிறிஸ்துவும் கொடுக்கும் சாட்சியே போதுமானது. நம்மை குறித்து நாமும் இதர 5 சாட்சியங்களும் போதுமானதாகவுள்ளது. அவர் நம்மை பார்க்கின்றார். எழுதிவைக்கின்றார். கிரியை செய்வார்.
கர்த்தாவே உம் குமாரன் மூலம் நல்ல சாட்சியங்களை ஏற்படுத்தியுள்ளீர். நாங்கள் எங்கள் தலையை காக்க சாட்சியங்களை புரட்டுகிறவராக அல்ல ஜீவனை காக்க சாட்சியங்களை உரைக்கிறவர்களாக இருக்க உதவி செய்யும்.
உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர் பெறுவான்.