சகோதரனிடம் அன்புகூருதல் மரண கண்ணிக்கு தப்பும் வழி.
He who does not love his brother abides in death. (1John 3:14)
1John 2:10; 1John 4:7,8,12,21; 1John 5:2; Matthew 25:40; John 13:35; John 15:12,17; Ephesians 1:15; Colossians 1:4; 1Thes 4:9; Hebrew 6:10; Hebrew 13:1; 1Peter 1:22; 1Peter 3:8.
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். (1 யோவான் 3:14)
1யோவான் 2:10; 1யோவான் 4:7,8,12,21; 1யோவான் 5:2; மத்தேயு 25:40; யோவான் 13:35; யோவான் 15:12,17; எபேசியர் 1:15; கொலோசெயர் 1:4; 1தெசலோனிக்கேயர் 4:9; எபிரெயர் 6:10; எபிரெயர் 13:1; 1பேதுரு 1:22; 1பேதுரு 3:1.
மரண கண்ணிக்கு தப்பும் வழி.
சகோதர அன்பு மரண கண்ணிக்கு தப்புவிக்கின்றது. சகோதர அன்பை மதியாதவன் மரணத்திலே வாழ்கிறான், மரண வாசனை உடையவனாயிருக்கிறான் அன்று ஆக்கியோன் கூறுகின்றார்.
ஜீவனுக்குள் வாழ்வதும், மரணத்துக்குள் வாழ்வதும் அவரவரின் வாழ்க்கை முறையிலேதான் உள்ளது. விவிலியமானது சகோதர சிநேகத்துக்கு சில இலக்கணங்களை வைத்துள்ளது.
ஒன்று, குறைவு பட்டுள்ள சகோதரனுக்கு உன்னுடைய நிறைவின் பிரகாரம் உதவி செய்ய வேண்டும். இல்லாததின் படியல்ல உள்ளதின்படியாக உதவி செய்ய வேண்டும். தன்னிடம் தன் தேவைக்கு மிஞ்சிசேமிப்பு இருக்கும் பட்சத்தில் தன் சகோதரன் உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்துக்கும் தவிக்கும் பட்சத்தில் தனது சேமிப்பை கொடுத்து உதவி செய்ய வேண்டும். அனேக தேவ மனிதர்களின் வீழ்ச்சிக்கு இதுவே காரணமாகும். தங்களிடம் அளவுக்கதிகமான சேமிப்பு இருக்கையில் குறைவு பட்டுள்ள தேவ மனிதர்களுக்கு கொடுத்து அவர்களின் குடும்பத்தையும் ஊழியங்களையும் தாங்காது போனதினால் உண்டான சாபமே அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. இதில் ஒரு விதி உண்டு குறைவுபட்ட சகோதரன் தன் குறைவை சொல்லி நிறைவுள்ள மனிதனிடம் கேட்கலாகாது. அது பல தவறுகளுக்கு வழி நடத்தும்.
இரண்டாவது, தனக்கு விரோதமாக குற்றம் செய்த சகோதரனை மனப்பூர்வமாகவும், உடல் பூர்வமாகவும் மன்னிக்க வேண்டும் என்பதாகும். சகோதர சிநேகத்தின் உச்ச நிலையே தன் சகோதரனை மன்னிப்பதாகும். இரட்சிக்கப்படாதிருந்து தீங்கு செய்திருந்தாலும், ஆஸ்திகளிலே தனக்குரிய பங்கை எடுத்துக் கொண்டிருந்தாலும், தனக்கு விரோதமாக வழக்காடு மன்றங்களுக்கு சென்றிருந்தாலும், கஷ்டமான நேரத்தில் கொடுத்துதவாமற் போயிருந்தாலும், தன்னை அடித்து காயப்படுத்தி அவமானப்படுத்தி அவதூறாய் பேசியிருந்தாலும் ஒருதரம் மாத்திரமல்ல ஏழெழுபதுதரம் மன்னிக்க வேண்டும் என்பதாகும். மன்னிப்பு என்பது தீங்கு நினையாதிருப்பது என்று ஒரு பொருளும் உண்டு. எவனுடைய குற்றங்களை பிழைகளை தவறுகளை மன்னிக்கிறோமோ அப்பொழுது நாம் பாக்கியவான்கள்.
உதவுபவரும், மன்னிக்கிறவரும் ஜீவனில் வாழ்கிறார்கள். ஜீவ வாசனையுடையவர்களாயிருக்கிறார்கள். ஜீவனை சுமந்து செல்கிறார்கள். ஜீவனை பகிர்ந்தளிக்கிறார்கள். ஜீவன் பெற உதவுகிறார்கள்.
உதாவதாவரும் மன்னியாதவரும் மரணத்தில் வாழ்கிறார்கள்.மரண வாசனையுடையவர்களாயிருக்கிறார்கள். மரணத்தையே சுமந்து செல்கிறார்கள். மரணத்தையே பகிர்ந்தளிக்கிறார்கள். மரணமடைய உதவுகிறார்கள்.
முந்தியவர் கிறிஸ்துவோடு இணைந்து நடக்கிறார். பிந்தியவர் மரணத்தின் அதிகாரியாகிய பிசாசானவனோடு இணைந்து நடக்கிறார்கள். முந்தியவரின் முடிவு ஜீவன். அவர் அநேகரை ஜீவனுக்குள் கொண்டு செல்லுகிறார். பிந்தியவரின் முடிவு அழிவு. அவர் அநேகரை அழிவுக்கு வழிநடத்துகிறார்.
தேவனுடைய ஊழியகாரர்கள் இந்த உபதேசத்தை கடைபிடித்து தங்கள் சபையிலே போதிக்க தவறினால் வரும் விளைவை எண்ணிப் பார்த்து செயல்படுங்கள்.
தேவன் பட்சபாதமுள்ளவரல்ல…
கேள்வி. ஐசுவரிய கிறிஸ்தவர்கள் ஏழை கிறிஸ்தவர்களை ஏன் மறந்துப் போனார்கள்?..
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன். இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும். சங்கீதம் 112.