தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை.. பிதாவின் ஒரேபேறான குமாரனே அவரை வெளிபடுத்தினார்.
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18)
யோவான் 12:41; யோவான் 14:9; யோவான் 17:6,26; மத்தேயு 11:27; கொலோசெயர் 1:15; 1 யோவான் 5:20; யாத்திராகமம் 23:20-22; யாத்திராகமம் 33:20; எண்ணாகமம் 12:8; உபாகமம் 4:12….
இவ்வசனத்தில் 3 விஷயங்கள் உண்டு…..
தேவன் யார்?……..
தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு எத்தகையது?….
இயேசுகிறிஸ்து ஏன் தம்மூலம் தேவனை வெளிபடுத்தினார்?..
அல்லது எப்படி வெளிபடுத்தினார்?…..
1. தேவன் ஆவியாயிருக்கிறார்….. யோவான் 4:24. சர்வ வியாபி – சர்வ வல்லவர் – சர்வ ஞானி…..
2.இயேசுகிறிஸ்து தேவனின் ஒரேபேறான குமாரன்…நேச குமாரன்…..பிரியமான குமாரன்…… லூக்கா 4:22……
3.பாவம் தேவனுக்கும் மனுகுலத்துக்கும் பிளவை உண்டுபண்ணியது. தேவனோடு மனிதனுக்கு நெருங்கிய பந்தம் இல்லை….. 1இராஜாக்கள் 8:12…..
4.இஸ்ராயேல் ஜனம் – நியாய பிரமாணம் மூலம் தேவன் தம் நேசகுமாரனை உலகிற்கு அனுப்பினார்……. யோவான் 4:22; கலாத்தியர் 4:5..
5.ஆதாமைப்போலல்லாது இயேசுகிறிஸ்து பிதாவின் விருப்பத்திற்கிணங்க நடந்து பூமியில் தேவன் வெளிப்பட செம்மையான களம் – சபை அமைத்தார்…… 1கொரிந்தியர் 15:22……
6.கிறிஸ்துவின் சரீரமாகிய சபை மூலமாக தேவன் தம்மை வெளிபடுத்த விரும்புகிறார்….. எபேசியர் 3:6,10……
7.இயேசுகிறிஸ்து தமது தந்தையை வெளிபடுத்திய விதம்…..
– நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்…… யோவான் 10:30.
– என்னாலேயல்லாமல் ஒருவரும் பிதாவிடம் வரமுடியாது…… யோவான் 14:6.
– அற்புத கிரியைகள் – பரலோக செய்திகள் மூலம் பிதாவை வெளிபடுத்தினார்……
– என்னை கண்டவனே பிதாவை கண்டான் என்றார்… யோவான் 14:9……
8.பிதாவினால் பூமிக்கு அனுப்பபட்டவர் இயேசு மட்டுமே… யோவான் 8:29.
பிதாவை கண்டவர் இயேசு மட்டுமே….
பிதாவை வெளிப்படுத்தியவர் இயேசு மட்டுமே…..
9.பழைய ஏற்பாட்டில் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தினார்… இதனால் ஒருவரும் அவரை காணமுடியவில்லை…
புதிய ஏற்பாட்டில் இயேசு என்ற மாம்சத்தின் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தினார்..இனி நாம் பிதாவை இயேசு மூலம் மட்டுமே பார்க்க முடியும்……
One question……
தேவன் தம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ற மாம்சத்தின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்த காரணம் என்ன?..