கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்

கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்.

We have heard from the law that the Christ remains forever. (John 13:34)

2Sam7:13,14; Ps72:7,17-19; Ps89:36,37; Ps110:4; Isa9:7; Isa53:8; Eze37:24,25; Dan2:44; Dan7:14,27; Mic4:7.

ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர், இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள். (யோவான் 12:34)

2சாமுவேல் 7:13,14; சங்கீதம் 72:7,17-19; சங்கீதம் 89:36,37; சங்கீதம் 110:4; ஏசாயா 9:7;53:8; எசேக்கியேல் 37:24,25; தானியேல் 2:44; தானியேல் 7:14,27; மீகா 4:7.

விவிலிய கிறிஸ்து:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தற்செயலாகவோ, சூழ்நிலைகளினிமித்தமாகவோ, வைராக்கியத்தினிமித்தமாகவோ வரலாற்றில் ஜெனித்தவர் அல்ல. அவரின் பிறப்பு முதல் எல்லா காரியங்களை குறித்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசனமாக விவிலியத்தில் உரைக்கப்பட்டுள்ளது. அவருடைய முதல் வருகையை இஸ்ராயேலர் போல சர்வ உலகமும், சிருஷ்டிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் தோன்றினார். எனவே விவிலியத்தை பின்பற்றுகிறவர்கள் மட்டுமே இயேசுவை அறிய முடியும்.

கிறிஸ்துவானவர் தேவனால் முத்திரிக்கப்பட்டும், அபிஷேகிக்கப்பட்டும் பூமியின் இரட்சகராகவும், உலக இரட்சகராகவும், மனித மீட்பராகவும் அனுப்பப்பட்டவர். இயேசுவை கிறிஸ்து என்று சொல்வதினால் இஸ்ராயேலரும், இயேசுவை ஆண்டவர் என்பதினால் ரோமர்களும், இயேசுவை தெய்வம் என்பதினால் மற்ற எல்லா ஜாதிகளும் மீட்படைந்து அவருடைய சபைக்குள்ளும், அவருடைய இராஜ்யத்துக்குள்ளும் அடைக்கலம் புகுகின்றனர்.

இந்த கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார். என்றும் வாழ்கிறார். என்றும் எல்லா யுகத்திலும் மாறாமையுடையவராய் கிரியை செய்கிறார். காலங்கள், சூழல்கள், வரலாறுகள் மாறலாம். அவரோ மாறாமையுடையவராய் என்றும் வாழ்கிறார். அவரின் உபதேசங்கள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் வாழும் எல்லா மனிதர்களுக்கும் எப்பொழுதும் மாறாமையுடையதாகவே இருக்கின்றது. என்றும் ஜீவிக்கின்ற அவரோடு நாம் இணைந்து கொண்டாலொழிய நம்மால் இவ்வுலகில் வாழ முடியாது. மறுமைக்குள் பிரவேசிக்க முடியாது. புது உலகிற்குள் பிரவேசிக்க முடியாது. அழியாமையை சுதந்தரிக்க முடியாது. என்றும் வாழும் அவரோடு நாமும் வாழுவோம்.

நம்மை வாழவைக்கும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்போம்.
இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். தானியேல் 7:13,14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME