சீமோன் பேதுரு பின்னே வந்து கல்லறைக்குள் பிரவேசித்தான்

சீமோன் பேதுரு பின்னே வந்து கல்லறைக்குள் பிரவேசித்தான்.

Simon Peter came, following him, and went into the tomb; and he saw the linen cloths lying there. (John 20:6)

John 6:67-69; Genesis 33:28; 1Kings 12:8; Job 12:12; Psalms 119:100; Proverbs 17:6;Psalms 71:9,18; Psalms 92:15; Proverbs 20:29; Leviticus 19:32; Proverbs 22:6.

சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, (யோவான் 20:6)

யோவான் 6:67-69; ஆதியாகமம் 33:28; 1 இராஜாக்கள்  12:8; யோபு 12:12; சங்கீதம் 119:100; நீதிமொழிகள் 17:6; சங்கீதம் 71:9,18; சங்கீதம் 92:15; நீதிமொழிகள் 20:29; லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 22:6. 

விருத்தாப்பியம் ஆசீர்வாதமானது: 
பேதுரு இளைஞர் சீஷனால் மதிக்கப்பட்டாரோ இல்லையோ வாலிபர் சீஷனை விடவும் தெளிவுள்ளவரும், நிதானமுள்ளவரும், பயமில்லாதவரும் தைரியமுள்ளவருமாய் இருந்திருக்கின்றார்.

இதனை மையமாகக் கொண்டு முதிர்வயதானோர், விருத்தத்தாப்பியத்திலுள்ளோர் ஆசீர்வாதமானவர்கள் என்ற தலைப்பில் தியானத்தை உங்கள் முன் கொண்டு வருகின்றேன்.
விவிலியமானது சில உண்மைகளை நமக்கு படிப்பிக்கின்றது. அவைகளை நியாயப்பிரமாண விதிகள் என்று சொல்லி தட்டிக் கழிக்க முடியாது. இவைகள் வாழ்வின் ஒரு பகுதியாக அமைகின்றது.
முதலாவது முதிர்வயதானவர்களிடமிருந்துதான் ஆசீர்வாதங்கள் பிறக்கின்றது என்பதாகும். தேவன் ஆசீர்வாதங்கள் குறித்த உண்மையை இவ்விதமாகவே முத்திரித்து வைத்துள்ளார். நாம் ஒரு வாக்குத்தத்தத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் போது முதிர்வயதானவர்களை எப்படி நடத்தினோம் என்று கண்காணிக்கப்படும். தங்கள் இறுதி காலங்களில் பெற்ற வாக்குகளின் சாரமாகிய ஆசீர்வாதத்தை பின் சந்ததிக்கு கொடுத்து விட்டு செல்கிறார்கள். முதியவர்கள் பூரண வயதில் மரிப்பது வரையிலும் அவர்களை செம்மையாக கண்காணித்து பராமரிப்பது அவசியமானது. ஆசீர்வாத விதைப் பின் சந்ததிக்கு வந்து விழும் வரையிலும் அவர்களை செம்மையாய் நடத்து.

இரண்டாவது முதிர்வயதான நரைத்தவர்களின் வாய் மொழிகள் அனுபவ பூர்வமாக உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய ஆலோசனைகளாக இருக்கின்றது. அவர்கள் தேவனுடைய வழியிலேயே நடந்து கற்பனைகளுக்கு கீழ்படிந்து சாரமேறினவர்களாக இருக்கிறார்கள். தங்கள் தோல்விகளையும் ஜெயத்தையும் குறித்து ஆராய்ந்து நல்ல ஆலோசனைகளை கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆகையினால்தான் முற்காலங்களில் மூத்தோர் முதுமொழிகள் என்ற பாடத்திட்டங்கள் இருந்தது. இப்பொழுது இவைகளை தள்ளிவிட்டார்கள்.

மூன்றாவது மூத்தோரை மதிப்பதும், கனப்படுத்துவதும், அவர்கள் முன்னிலையில் எழுந்து நிற்பதும், அவர்களுக்கு கீழ்ப்படிவதும் மிகவும் அவசியமாக இருக்கின்றது. முற்காலங்களில் எல்லா வீடுகளிலும் பொது இடங்களிலும் இத்தகைய காரியம் முக்கிய படுத்தப்பட்டது. இக்காலத்திலோ அறிவுகொழுத்தவர்களினிமித்தம் மூத்தோர் மதிக்கப்படவில்லை. இதினிமித்தம் சமுதாய சீரழிவுகள் உண்டாகி வித்தியாசமான தலைமுறைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. சில முதியோர்களின் தவறான செயல்களுக்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அவர்கள் தங்கள் பிள்ளைகளால் பராமரிக்கப்படவில்லை. இன்னொன்று அவர்கள் சிறுவயதிலிருந்து கொண்டிருந்த தவறான பழக்க வழக்கங்கள் ஆகும்.

திருச்சபையானது முதியவருக்கும், மூத்தவருக்குமுரிய மரியாதை செலுத்த வேண்டும் என்று போதிக்கின்றது. இயேசுவைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் விசுவாசிகளாகவோ ஊழியக்காரர்களாகவோ இருக்க தகுதி இல்லாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். 
நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். 
என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். நீதிமொழிகள் 4:1-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME