முந்தினவர் வந்து உள்ளே பிரவேசித்து கண்டு விசுவாசித்தார்

முந்தினவர் வந்து உள்ளே பிரவேசித்து கண்டு விசுவாசித்தார்.

Who came first went in and he saw any believed. (John 20:8)

John 13:15; Romans 15:6; Philippians 3:17; 1 Thessalonians 1:2; 2Thessalonians 3:9; 1Timothy 4:12; Titus 2:7; 1Peter 2:21; 1Peter5:3.

முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான். (யோவான் 20:8)

யோவான் 13:15; ரோமர் 15:6; பிலிப்பியர் 3:17; 1தெசலோனிக்கேயர் 1:2; 2 தெசலோனிக்கேயர் 3:9; 1தீமோத்தேயு 4:12; தீதது் 2:7; 1பேதுரு 2:21; 1பேதுரு 5:3.

மாதிரி:
இதன் ஒரு அம்சத்தை யோவான் 13:15 ன் தியான உரையில் காணவும். இங்கே மாதிரியின் இருமுகங்களை தியானிக்கின்றோம்.
முதலாவது மாதிரியாய் இருக்கவேண்டிய மூத்தோர். விருத்தாப்பியம் ஆசீர்வாதமானது என்பதை அறிந்தோம். பின் தலைமுறைக்கு நல்ல மாதிரிகளை வைத்து போவதற்காகவே தலைமை பொறுப்புகளில் தேவன் நம்மை உட்கார வைத்துள்ளார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வந்த சீஷர்களும் சீஷர்களை பின்பற்றி வந்த திருச்சபை பிதாக்களும் நல்ல நல்ல மாதிரிகளை பின் வைத்து போயுள்ளார்கள். எல்லா மாதிரிகளும் கிறிஸ்துவை மட்டுமே பிரதிபலித்துக் காட்டும். நல்ல ஒழுக்கத்தை மாதிரியாகவும், நல்ல குணங்களை மாதிரியாகவும், நற்கிரியைகளை மாதிரியாகவும், சுவிசேஷ பிரபல்யத்தை மாதிரியாகவும், எளிமையான அணுகுமுறைகளை மாதிரியாகவும் வைத்து சென்றுள்ளார்கள் நம் முன்னோர்கள். முப்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும் நல்ல மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது. அன்றிருந்த தலைமை பொறுப்பாளர்கள் நல்ல பின்னடியார்களை முன்னிறுத்தி சென்றிருந்தார்களானால் இக்காலத்தில் மாதிரியில்லாத காரியங்களும் தலைமுறை இடைவெளி நிகழ்வுகளும் உருவாகியிருக்காது. மாற்றங்களை குறித்துப் பேசினாலும் எழுதினாலும் மாற்றங்கள் உண்டாவதில்லை. நல்ல பின்னடியார்களை தெரிந்தெடுப்பதில்தான் மாதிரிகள் உண்டாகின்றது.

இரண்டாவது மூத்தோர்களின் மாதிரியை பின்பற்றவேண்டிய இளையோர்கள். கிறிஸ்துவை சீஷர்கள் பின்பற்றி அவர்களின் பின்சந்ததிக்கு நல்ல மாதிரிகளாக இருந்தார்கள். அவர்களைப் பின்பற்றி வந்தமாதிரி ஆளுமைகள் பாரம்பரியமாக அவைகளை பின்பற்றியும் அனுசரித்தும் வந்தார்கள். பேதுருவை பின்பற்றிய யோவான் மாற்க்கு, பவுலை பின்பற்றிய தீமோத்தேயு போன்றவர்கள் சரித்திர புருஷர்களாக மாறினார்கள். சபைகளில் தலைமுறை இடைவெளியும் தலைமைத்துவ கோளாறுகளும் உண்டானாலும் மாதிரியான ஆளுமைகள் அவைகளை சரி செய்து நல்ல பாரம்பரியங்களை உருவாக்கினார்கள். போதகரையும், தகப்பனையும் உண்மையாக பின்பற்றி வருகிற தலைமுறைகள் மட்டுமே பின் சந்ததிக்கான மாதிரி விளக்காயிருப்பார்.

அன்பானவர்களே பெரியவர்களாகிய நாம் எப்படிப்பட்ட மாதிரிகளைப் பின் வைக்கின்றோம். தனக்கு பின்பாக தன்னை விடவும் நல்ல மாதிரிகளாக இருக்கின்றவர்களை முன்னிறுத்த தேவன் அடையாளம் காட்டவில்லையோ. சற்றே சிந்திப்போம்.
பின்பற்றவேண்டிய இளையோர்களே உங்களுக்கு நல்ல மாதிரிகளை பின் வைத்துப் போய் உள்ள மூத்தவர்களின் வழிமுறைகளை மாற்றாமல் சிதைக்காமல் அதே வழியில் ஓடுவீர்களெனில் நீங்களும் நல்ல மாதிரிகளாக யோசுவாவை முன்னிறுத்தியதைப்போல உங்களையும் முன்னிறுத்துவார் ஆண்டவர்.

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.  எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்டசபாதம் இல்லையென்றும் அறிந்து கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். எபேசியர் 6:1-9

ADD YOUR COMMENT

Powered By Indic IME