நான் என் பிதாவிடம் கண்டதைச் சொல்கிறேன், நீங்களும் உங்கள் பிதாவிடம் கண்டதைச் செய்கிறீர்கள்.
I speak what I have seen with My Father,and you do what you have seen with your father. (John 8:38)
Jn8:26; Jn3:32; Jn5:19,30; Jn12:49,50; Jn14:10,24; Jn17:8; Jn8:41,44; Mt3:7; 1Jn3:8-12.
நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். (யோவான் 8:38)
யோவான் 8:26; யோவான் 3:32; யோவான் 5:19,30; யோவான் 12:49,50; யோவான் 14:10,24; யோவான் 17:8;8:41,44; மத்தேயு 3:7; 1யோவான் 3:8-12.
நமது செயல்கள் நமது பிதாவை வெளிபடுத்துகிறது.
இயேசுகிறிஸ்து தமது பிதாவிடமிருந்து வந்தார் என்பதற்கான அடையாளமாக தமது வார்த்தைகளையும், அற்புத கிரியைகளையும் சாட்சியமாக வைத்தார். மேலும் தாம் ஒருவரையும் நியாயந்தீர்க்காததினால் தமது பிதா இன்னார் என்பதையும் வெளிபடுத்தினார்.
யூதர்கள் இயேசுவை பகைத்தும், வெறுத்தும், கொலைசெய்ய முயற்சித்தும் இருப்பதினால் தாம் அறிவித்த வெளிபடுத்திய பிதா அல்லாது வேறே பிதாவை வெளிபடுத்துகிறதாயிருக்கிறது என்கிறார். கசப்பும் வெறுப்பும் குரோதங்களும் பிசாசையும் அவன் குணத்தையும் வெளிபடுத்துவதினால் யூதர்களாகிய இவர்களின் பிதா பிசாசவனே என்கிறார்.
ஒருவர் நமக்கு எதிராக பேசும்போது , செயல்படும்போது அவர்கள்மேல் கசப்பும், வெறுப்பும், பகையும் நம்மிலிருந்து வெளிப்படுமானால் நாம் பிசாசானவனை பின்பற்றுகிறவர்களாயிருக்கிறோம் என்று பொருளாகின்றது.
நீதியை செய்யாமலும், தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல என்கிறார் யோவான். 1யோவான் 3:10. உலகத்தில் அன்புகூர்ந்திருக்க தேவனிடத்தில் அன்புகூராதிருத்தல் தேவனுக்குரியவன் என்பதிலிருந்து மாறுபடுகின்றது.
நமது செயல்கள், குணங்கள், பேச்சுகள் யாவும் நாம் யாரை பின்பற்றுகிறோம் என்பதை வெளிபடுத்துகிறது.
எனவே பிசாசின் குணங்களை நாம் தள்ளிவிட்டு தேவனுக்குரிய குணங்களின் பிரதானமாகிய பாவிகளிடத்தில் பரிவுகாட்டும் இரக்ககுணம் உடையவர்களாயிருந்து பாவிகளை மனந்திரும்ப செய்வோம்.
கர்த்தாவே உம்மை உம் குமாரன் வெளிப்படுத்தியதுபோல நாங்களும் உம்முடைய குணங்களை வெளிப்படுத்தி உமக்கு மகிமை உண்டாகப்பண்ண எங்களை உம் வழியில் நடத்தும்.