ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.
cried out:Hosanna,Blessed is He who comes in the name of the LORD.The King of Israel. (John 12:13)
Mt21:9; Mt23:39; Mk11:9,10; Lk19:38; Ps72:17-19; Ps118:25,26; Isa49:6; Hos3:5; Zep3:15; Rev15:3.
மத்தேயு 21:9; மத்தேயு 23:39; மாற்கு 11:9,10; லூக்கா 19:38; சங்கீதம் 72:17-19; சங்கீதம் 118:25,26; ஏசாயா 49:6; ஓசியா 3:5; செப்பனியா 3:15; வெளி 15:3.
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். (யோவான் 12:13)
ஓசன்னா:
ஓசன்னா என்றால் உயர் தொனியால் கர்த்தரின் நாமத்தை சொல்லி கூப்பிடுதல் மற்றும் சாதகமானதாயிருக்கட்டும் என்று பொருளாகும்.
இயேசுவை தாவீதின் குமாரன் என்று அழைத்தவர்கள் அவரை மேசியா என்றும் புகழ்ந்தார்கள். இயேசுவை முன் நடப்பாரும், பின் நடப்பாரும் ஓசன்னா என்று சொல்லி புகழ்ந்தனர். எல்லா துதியும், கனமும், புகழும், மகிமையும் அவருக்கே உண்டாகுக. இச்சொல் எபிரேயத்தில் கர்த்தாவே இரட்சியும் என்பதாகும். அவர் புகழப்படும்போது அவரின் மகிமையும், மகத்துவமும், வல்லமையும் இறங்கி வந்து அவரின் ஜனங்களை இரட்சிக்கிறது.
இயேசுகிறிஸ்து கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர். அவர் இஸ்ராயேலை அதன் சகல அக்கிரமங்களினின்றும் இரட்சிக்கும்படியாக தேவனுடைய நாமத்தினாலே வந்திருக்கிறார். தன் சுய நாமத்தினால் அல்ல, ஒரு நாட்டின் பெயராலும் அல்ல, ஒரு தலைவரின் பெயராலும் அல்ல, வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவராகிய யெகோவா தேவனின் நாமத்தினாலே வந்திருக்கிறார். அவரே இரட்சிக்கிறவர். அவரே காயம் கட்டுகிறவர். அவரே ஆசீர்வதிக்கிறவர். இஸ்ராயேலர் அவரை நம்பாமல் போனாலும் அவரே இஸ்ராயேலை இரட்சிக்கும்படியாக வந்தவர்.
அவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். தேவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டவர் அவர் மட்டுமே. வேறு எவரும் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. ஆசீர்வதிக்கப்பட்ட அவரால் மட்டுமே இஸ்ராயேலர் ஆசீர்வதிக்கப்பட முடியும். அவர்கள் அவரை நிராகரித்தால் இழப்பு அவர்களுக்குதான்.
ஆம் நம்மை மீட்கும்படியாக தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டும், ஆசீர்வதிக்கப்பட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டவர் இயேசு மட்டுமே. நாம் அவரை ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அவரே இரட்சிக்கிறவர். அவரே ஆசீர்வதிக்கிறவர், அவரே பரிசுத்தம் பண்ணுகிறவர்.
அவரை ஏற்றுக்கொண்டால் உங்களை மீட்டு ஆசீர்வதித்து தம்மிடம் சேர்ப்பார். அவரை நிராகரித்தால் உங்கள் பாவங்களிலே நீங்கள் செத்து சாபத்தை சுதந்தரித்து நரகிலே சேர்க்கப்படுவீர்.
கொஞ்சகாலத்தில் அவரின் கோபம் பற்றியெரியப்போகிறது. அவரை அண்டிக்கொள்ளுங்கள். நடுக்கத்துடன் சேவியுங்கள். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம்
இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. அப்போோஸ்தலர் 4:12.