புதிதான கட்டளை, நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.
A new commandment I give to you, that you love one another. (John 13:34)
John 15:12,13,17; John 17:21; Romans 12:10; 1Corinthians12:26,27; 1corinthians13:4-7; Galatians5:13,14; Ephesians5:2; Philippians 2:1-5; Colossians3:12,13; 1John 4:7-11; 1John 5:1.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவான் 13:34)
யோவான் 15:12,13,17; யோவான் 17:21; ரோமர் 12:10; 1கொரிந்தியர் 12:26,27; 1கொரிந்தியர் 13:4-7; கலாத்தியர் 5:13,14; எபேசியர் 5:2; பிலிப்பியர் 2:1-5; கொலோசெயர் 3:12,13; 1யோவான் 4:7-11; 1யோவான் 5:1.
புதிய கட்டளை:
கட்டளை என்ற சொல் பு.ஏ ல் ஏறக்குறைய 71 தடவைகள் வந்துள்ளன. ஒரு காரியம் எப்படி செய்யப்பட்டுள்ளதோ அதே அடிப்படையில் செய்ய வைப்பதாகும். கர்த்தராகிய இயேசு எவ்விதம் செய்து நிறைவேற்றியுள்ளாரோ அதை அப்படியே செய்வதற்கு கூறுகின்றதே கட்டளையாகும். இந்த அன்பின் செயல்பாடு புதிய கட்டளையாகும். நியாயபிரமாணங்களின் அடிப்படையில் இருதயத்தையும் வாழ்வையும் பக்குவப்படுத்துகிற முனைப்பிற்கு வேறொன்றாக தேவன் காட்டிய அன்பின் அடிப்படையில் ஒரிவரிலொருவர் அன்பாயிருப்பதற்கு கட்டளையிடுகின்றார். நியாயபிரமாணத்தின் அடிப்படையில் தீர்ப்பு உண்டாவதுபோல இனி அன்பின் அடிப்படையில் தீர்ப்பு உண்டாகும்.
ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பது நடைமுறை கட்டளையாகும். இது ஏட்டு கட்டளையல்ல.
அன்பு என்பதற்கு அகாப்பே என்று தரப்பட்டுள்ளதினால் இந்த அன்பு பரலோக அன்பாகவும், தேவனின் அன்பாகவும், கிறிஸ்துவின் அன்பாகவும் அறியப்படுகின்றது. இயேசுகிறிஸ்து பிதாவின் அன்பை உடையவராயிருந்து சீஷர்களுக்கு காண்பித்த அதே அன்பை சீஷர்கள் ஒருவரிலொருவர் காண்பிக்க வேண்டும். அவர்களுக்குள் பலிதமான அன்பையே நாமும் ஒருவருக்கொருவர் காண்பிக்க வேண்டும்.
நெருக்கி பிழிகிற உடைத்து நொறுக்குகிற ஆட்சியாளர்கள் மத்தியிலும், வஞ்சித்து ஏமாற்றுகிற இருக்கிறதையும் பிடுங்கிக் கொள்கிறகொள்ளை கூட்டத்தின் மத்தியிலும்நமது உழைப்பையும் பெலத்தையும் உறிஞ்சி குடிக்கின்ற வியாதிகள் பலவீனனகள் மத்தியிலும் கிறிஸ்துவின் பின்னடியார்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும். ஜீவனை பறித்துக்கொண்டாலும், இனத்தினின்று ஒதுக்கி வைத்தாலும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.
கிறிஸ்துவின் அன்பை மட்டுமே பிறருக்கு கொடுங்கள். ஜாதி இனம் மொழி நாடு கிராமம் பட்டணம் கட்சி கடந்து கிறிஸ்துவின் அன்பை காட்டுங்கள்.
எங்கும் அன்பின் நதி பிரவாகிக்கட்டும்.உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:35-39.