என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல, இவ்விடத்துக்குரியதுமல்ல

என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல, இவ்விடத்துக்குரியதுமல்ல.

Jesus answered, My kingdom is not of this world. (John 18:36)

John 6:15; John 8:15; Matthew 12:14; Matthew 17:20,21; Romans 14:17; Colossians 1:12-14; Psalm 45:3-7; Daniel 2:44; Daniel 7:14; Zechariah 9:9.

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோவான் 18:36)

யோவான் 6:15; யோவான் 8:15; மத்தேயு 12:14; மத்தேயு 17:20,21; ரோமர் 14:17; கொலோசெயர் 1:12-14; சங்கீதம் 45:3-7; தானியேல் 2:44; தானியேல் 7:14; சகரியா 9:9.

கிறிஸ்துவின் இராஜ்யம் – 1:

விவிலியம் மூன்றுவிதமான இராஜ்யங்களைக் குறித்துக் கூறுகின்றது. தேவனுடைய இராஜ்யம், சாத்தானின் இராஜ்யம், மனிதர்களின் இராஜ்யம் ஆகும். தேவனுடைய இராஜ்யத்தை பிதாவின் இராஜ்யம், கிறிஸ்துவின் இராஜ்யம் என்றும் கூறுகின்றது. இராஜ்யம் என்பது ஆளுகை என்றும் கூறலாம். பிலாத்துவின் எண்ணத்துக்கு மாறாக இயேசுகிறிஸ்து தமது இராஜ்யத்தைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். இயேசுகிறிஸ்துவின் இராஜ்யம் குறித்து இயேசுகிறிஸ்து கொண்டிருந்த மனநிலையை இன்றைய தியானத்தில் நினைவுகூர்வோம்.

என் இராஜ்யம் என்பதை தெளிவாகவும், துல்லியமாகவும் இயேசு கூறுகின்றார். தேவனுடைய இராஜ்யத்துக்கும் தனது இராஜ்யத்துக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இது பிரதிபலிக்கும்.

என் இராஜ்யம் என்பது என்னுடைய நாமத்தில் – என்னுடைய கிரியைகளில் உருவாக்கப்படுவதாகும் என்றும் கூறுகின்றார்.

என் இராஜ்யத்தில் எவரையும் நான் பங்குதாரராகசேர்த்து உருவாக்குவதில்லை. நான் நானே என் பிதாவின் அருள் பெற்று உருவாக்குகிறேன். விசுவாசிக்கிறவர்கள் என் இராஜ்யத்தில் இணைக்கப்படுவார்கள். இங்கு நான் மட்டுமே தலை.

என் இராஜ்யம் மாசத்துக்குரியதுமல்ல, உலகத்துக்குரியதுமல்ல, பேய்தனத்துக்கு அடுத்ததுமல்ல என்கிறார்.

என் இராஜ்யத்துக்காய் என் இராஜ்யத்தை ஸ்தாபிக்க எவ்விதமான யுத்தம் செய்ய எவரையும் நான் ஏற்படுத்தவில்லை. என் இராஜ்யத்தின் வழிகாட்டுதல்படி உழைப்பதற்காக மட்டுமே ஏற்படுத்தியுள்ளேன் என்கிறார்.

என் இராஜ்யம் ரோம சாம்ராஜ்யமோ, யூதர்களின் சாம்ராஜ்யமோ, வேறு எந்த நாட்டு சாம்ராஜ்யமோ சார்ந்ததல்ல. எந்த சாம்ராஜ்யங்களுக்கும், அரசுகளுக்கும் என் இராஜ்யம் சம்பந்தமில்லை.

இயேசுகிறிஸ்து இவ்விதம் கூறியிருப்பது அன்றுமட்டுமல்ல, இன்றைக்கும், என்றைக்கும் பொருத்தமானதே. தன் பெயரை நிலைநாட்டவோ, தன் பெயர்பிரஸ்தாபத்துக்காகவோ அவருடைய பணியாட்கள் பணிசெய்ய அழைக்கப்படவில்லை. எந்த ஆட்சியோடும், ஆளுகையோடும் இணைந்து போவதற்கோ, ஒத்து போவதற்கோ அழைக்கப்படவில்லை. அதேவேளையில் எந்த அரசோடும், ஆட்சியோடும் எதிர்த்து நிற்பதற்கும் அழைக்கப்படவில்லை.

கிறிஸ்துவின் இராஜ்யம் கிறிஸ்துவை மட்டுமே தலைமையாககொண்டது. தலைமைத்துவத்துக்கு மேலான ஸ்திதிகளை அவருடைய இராஜ்யத்தின் பணியாட்கள் நினைவகத்தில் கூட கொண்டிருக்கலாகாது. அவருடைய பெயர்பிரஸ்தாபத்துக்காகவும், அவருடைய இராஜ்ய வளர்ச்சிக்காகவும் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளனர்.
கிறிதுவின் ஆளுகை கிறிஸ்துவை மட்டுமே பிரதிபலிக்கும். தொடரும்……

ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர். 1:12-20.

ADD YOUR COMMENT

Powered By Indic IME