என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்.
Now My soul is troubled, and what shall I say? (John 12:27)
Jn11:33-35; Jn13:21; Mt26:38,39,42; Mt14:33-36; Lk22:44,53; Heb5:7; Ps69:1-3; Ps88:3; Isa53:3; Isa38:15.
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். (யோவான் 12:27)
யோவான் 11:33-35; யோவான் 13:21; மத்தேயு 26:38,39,42; மத்தேயு 14:33-36; லூக்கா 22:44,53; எபிரெயர் 5:7; சங்கீதம் 69:1-3; சங்கீதம் 88:3; ஏசாயா 53:3; ஏசாயா 38:15.
என் ஆத்துமா கலங்குகிறது:
என் ஆத்துமா கலங்குகிறதினால் நான் என்னச் சொல்லுவேன் என்று தனக்குள்ளும் தன் தேவனுக்குள்ளும் கூறிக்கொள்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் கலக்கத்துக்குரிய காரணம் என்ன? முந்தைய வசனங்களில் கோதுமை மணியாக மரிக்கப்போவதைக் குறித்து பேசுகிறார். தனக்குரிய கனம் கிடைக்குமென்றாலும் அதனை மரணத்தினூடாகத்தான் பெறமுடியும் என்று அறிந்ததினால் தனக்குள் கலங்கி தேவனிடம் முறையிடுகின்றார்.
கலங்கிய இயேசு செய்தது என்ன?. தனக்குள் உண்டான கலக்கத்தை பிறரிடம் சொல்லி உதவி பெறுவதற்குபதில் தன்னை அனுப்பிய தந்தையிடமே சொல்லி அங்கலாய்க்கின்றார். ஊழியம் செய்கிறவர்கள், தலைமைத்துவத்தில் நிலைகொண்டிருப்பவர்களின் உள்ளங்களில் உண்டாகும் கலக்கங்களையும், வேதனைகளையும் கர்த்தராகிய கிறிஸ்துவிடம் சொல்லி பரிகாரம் தேடுவதே சிறப்பானது.
ஆத்தும கலக்கம் மனமுறிவுக்கும் ஆவி முறிவிக்கும் வழிவகுக்கிறதாயிருப்பதினால் அவைகள் நண்பர்களிடமோ, நம்பிக்கைக்குரியவர்களிடமோ சொல்லுவதற்கு பதில் கர்த்தரிடமே பகிரிந்துக்கொள்ள வேண்டும். கலக்கம் இல்லாத வாழ்வு இல்லை.
எவ்வளவு நன்மைக்காய் பாடுபடுகிறோமோ, எவ்வளவு நன்மை செய்கிறவர்களாக காணப்படுகிறோமோ, எவ்வளவு யோக்கியதையாய் வாழ முற்படுகிறோமோ அவ்வலவாய் போராட்டங்களும், நெருக்கங்களும், இடறல்களும் உண்டாகும்.
ஆன்மா கலக்கமடைந்து வெறுமையை உணரவைக்கும். இந்நேரங்களில் ஆவியானவரின் ஆலோசனைகள் மட்டுமே நமக்கு பயனைக் கொண்டு வரும். வெளியரங்கமான நிகழ்வுகள் உள்ளாக மாற்றங்களை ஏற்படுத்தும். உள்ளான மாற்றங்கள் வெளியரங்கமான மாறுதல்களை உருவாக்கும்.
விவிலியத்தில் மோசே, பவுல் போன்ற பல பரிசுத்தவான்கள் இவ்விதமான ஆன்ம கலக்கத்தை அனுபவித்தார்கள். எலியா போதும் ஆண்டவரே என்று கலங்கி பேசினான். எனவே நாம் மிகவும் கவனமாக ஆவிக்குரிய வாழ்வில் அடியெடுத்து வைக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
இயேசுகிறிஸ்துவின் மனகலக்கம் முடிவு எடுப்பதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆரோக்கியமான முடிவை எடுத்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார்.
எனது உடைதல்கள், நொறுங்குதல்கள் யாவையும் பரம தகப்பனிடம் பகிர்கின்றேன். அதனால் மனதைரியம் அடைகின்றேன், பெலனடைகின்றேன்.
கலககமில்லாத வாழ்வுமில்லை, ஜெயிக்கமுடியாத கலக்கமுமில்லை.
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 42:5.