என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்.
If you had known Me, you would have known My Father also. (John 14:7)
John1:18; John 8:19; John 15:24; John 16:3; John 17:3,6,21,23,26; Matthew 11:27; 2Corinthians 4:6; Hebrews 1:3.
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். (யோவான் 14:7)
யோவான் 1:18; யோவான் 8:19; யோவான் 15:24; யோவான் 16:3; யோவான் 17:3,6,21,23,26; மத்தேயு 11:27; 2கொரிந்தியர் 4:6; எபிரெயர் 1:3.
பிதாவைக் காண்பிக்கும் இயேசு:
இந்த வசனமானது பல உண்மைகளை நமக்கு காண்பிக்கின்றது.
முதலாவது, இயேசுகிறிஸ்துவே பிதாவைக் காண்பிக்கின்றவர் – வெளிப்படுத்துகின்றவர். காரணம் பிதாவானவர் இயேசுவையே தமது கண்ணாடியாக ஏற்படுத்தியுள்ளார். பிதாவின் சாயலை உடையவராக இருப்பதினால் பிதாவாகிய தேவனை அவரில் காணலாம்.
இரண்டாவதாக, இயேசுவை தேவனிடத்திலிருந்து வந்த தேவகுமாரன் என்று அங்கீகரித்து விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறவர்களே இயேசுவின் சிந்தையை, தன்மையை அடைகிறார்கள். அப்படிபட்டவர்களே பிதாவாகிய தேவனை அறிவர்.
மூன்றாவதாக, இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமன்று, அவரை அறிகிற அறிவில் வளர்ந்திருக்க வேண்டும். அவரை அறிகிற அறிவில் வளர விவிலியம் துணைபுரிகின்றது. விவிலியத்தை படித்து ஏற்றுக்கொண்டு தேவகுமாரனின் தன்மைகளை அறிந்தால் மட்டுமே பிதாவாகிய தேவனை அறிய இயலும்.
நான்காவதாக, இயேசுவை அறிகிற அறிவில் விருத்தியடைந்தவன் தேவனுடைய ஆவியினாலே இயேசுகிறிஸ்துவின் பிதாவை அறிகின்றான். ஏனெனில் தேவனுடைய ஆவியானவரே தேவனுடைய ஆழங்களை அறிகின்றவர். தேவனுடைய ஆவியினால் தேவனுடைய இரகசியங்களை அறிந்து கிறிஸ்துவையும் பின்பற்றி தேவனுடைய ஜனமாக விளங்குகிறார்கள்.
வசனத்தினால் கிறிஸ்துவும், ஆவியினால் தேவனும் அறியப்படுகின்ற உன்னதமான அறிவே நம்மை விசுவாசத்தின் பாதையில் வழி நடத்தும் உபாத்தியாயிருக்கின்றது.
இயேசுகிறிஸ்து வெளிப்பட்டதினால் பிதா அறியப்பட்டிருக்கின்றார். இனி ஒருவரும் நான் தேவனை கண்டதில்லை என்று கூற முடியாது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் தேவனைக் காணவும் முடியாது, அறியவும் முடியாது.
இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்வதே பரலோகம் செல்லும் ஒரே வழி.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1யோவான்2:2-6.