என்னில் வாசமாயிருக்கிற பிதாவே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்
I speak to you I do not speak on My own authority; but the Father who dwells in Me does the works. (John 14:10)
John 14:20; John 17:21-23; John 17:8; John 5:17-23; 1John 5:7; Act 10:38;Colossians 1:19,20; Colossians 2:9.
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். (யோவான் 14:10)
யோவான் 14:20; யோவான் 17:21-23; 1யோவான் 5:7; யோவான் 17:8; யோவான் 5:17; அப்போஸ்தலர் 10:38; கொலோசெயர் 1:19,20; கொலோசெயர் 2:9.
என்னில் ஜீவிக்கிற பிதா:
தேவனுடைய வாக்குதத்தங்களின்படியும், பரிசுத்த ஆவியினாலும் பிறப்பிக்கப்பட்டவரே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. ஆதாம் தேவனை விட்டு விலகியதுபோல இயேசுகிறிஸ்து பிதாவை விட்டு விலகாமலிருந்ததினால் பிதாவானவரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் பாத்திரமாகி பிதாவின் ஒரே பேறான மகனாகவும், நேசகுமாரனாகவும் காணப்பட்டார்.
பிதாவானவர் இவ்வுலகிலும் இஸ்ராயேலரிடையிலும் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தவைகளை இயேசுகிறிஸ்துவுக்கு காண்பித்தும் கற்பித்தும் கொடுத்தார். இயேசுகிறிஸ்துவும் பிதா தமக்கு காண்பிக்கிறவைகளைச் செய்து, தமக்கு கற்பிக்கிறவைகளைக் கற்பித்து பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றினார். எனவேதான் இயேசுகிறிஸ்து தமக்கு மகிமையும், கனமும், புகழ்ச்சியும் ஏற்காமல் பிதாவுக்கு செலுத்தும்படியாக இவ்வாறு கூறினார்.
இயேசுகிறிஸ்துவும் பிதாவும் தோற்றத்திலும் சாயலிலும் தன்மைகளிலும் கிரியைகளிலும் பேச்சிலும் ஒன்றித்து காணப்பட்டார்கள். இருவரின் ஒன்றிப்பே முழு உலகையும் தேவனுக்கு நேராக திருப்ப காரணமாயிற்று.
தேவனுடைய ஜனங்கள் ஜாதி அமைப்பையும், கட்சிகளையும், கொள்கைகளையும், அனுபவங்களையும் உடையவர்களாயிருந்து வேறுபடாமல், கிறிஸ்துவுக்குள் ஒன்றித்து நின்று ஆவியானவரின் நடத்துதல்படி கிறிஸ்துவை பிரசங்கிப்போமெனில் இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகும். நமக்குள் ஆவியானவர் வாசமாயிருக்கும்போது நாம் எவ்விதத்தில் வேறுபாடுகளை மிகைபடுத்துவோம்?. குறைகளை சுட்டிகாட்டலாம், திருத்த உதவலாம். வெறுப்பை கொட்டவும், கசப்பை உமிழவும் ஆவியானவர் நமக்கு அதிகாரம் தரவில்லையே. நமக்குள் வாசமாயிருக்கிற ஆவியினாலே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே பிதாவாகிய தேவனை தொழுகின்றோம்.
என்னுள் வாசம்பண்ணும் ஆவியினாலே அன்பை விதைக்கின்றேன். அன்பையே அறுவடை செய்ய விரும்புகின்றேன்.
இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார். எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். 1கொரிந்தியர் 12:11-13, 25-27.