என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்வீர்கள்.
If you love Me, keep My commandments. (John 14:15)
John 8:42; John 15:10-14; John 21:15-17; Matthew 10:37; Matthew 25:34-40; 1Corinthians 16:22; Gal 5:6; 1Peter 1:8; 1John 2:3-5; 1John 4:19,20; 1 John 5:2,3.
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். (யோவான் 14:15)
யோவான் 8:42; யோவான் 15:10-14; யோவான் 21:15-17; மத்தேயு 10:37; மத்தேயு 25:34-40; 1கொரிந்தியர் 16:22; கலாத்தியர் 5:6; 1பேதுரு 1:8; 1யோவான் 2:3-5; 1யோவான் 4:19,20; 1 யோவான் 5:2,3
கைக்கொள்ளும் அன்பு:
இவ்வசனம் சீஷர்களுக்கும், இரட்சிக்கப்பட்டவர்களுக்கும் சொல்லப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். ஏனெனில் கிறிஸ்துவை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவருடைய கற்பனைகளை எதிர்த்து நிற்க மாட்டான், கேள்வி கேட்கவும் மாட்டான், முற்றிலும் கீழ்படிவான். அதாவது, அவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து கைக்கொண்டு அதன்படி நடக்கிறவன் மட்டுமே அவரை நேசிக்கிறான். அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறான்.
கட்டளைகள் பாரமானவைகளாயிருந்தாலும் அல்லாவிட்டாலும் அதன்படி நடக்க தன்னை தயார்படுத்துகிறவனே அதற்காய் பிரயாசப்படுகிறவனே அவரை நேசிக்க ஆயத்தமாயுள்ளவனாகின்றான். நான் ஆண்டவரின் பிள்ளை என்று சொல்லியும், அவரை நேசிக்கிறவன் என்று சொல்லியும், அவரை ஊரெங்கும் அறிவிக்கிறவன் என்று சொல்லியும், ஆவியின் வரங்கள் உடையவன் என்று சொல்லியும் அவருக்கு பயந்து அவருடைய கட்டளைகளின்படி நடவாது அந்நிய மாம்சத்தை பின்தொடர்ந்து, அசுத்தமானவைகளில் கைகளை போட்டு, அக்கிரமகாரரோடு கலந்து, அந்நிய நுகத்திலே பிணைப்பட்டு, பொய்யை பின்பற்றி, சூதுவாதுடையவர்களாயிருந்து, அவரின் வார்த்தைகளுக்கு கீழ்படியாதவர்களாயிருந்தால் கிறிஸ்துவை நேசிக்கிறவன் அல்ல, அவரை தூஷிக்கிறவனே. இப்படிபட்டவன் மாய்மாலக்காரனாயிருக்கின்றான். இவனுக்குரிய தண்டனை அயர்ந்திராது.
அவரை நேசிக்கிறவன் அவருடைய கட்டளைகளில் சிறிதானதொன்றையாகிலும் மீறியதாக உணர்த்தபட்டாலும் அவரிடம் நெருங்கிசேர தைரியம் இல்லாமல் அவருடைய இரக்கத்திற்காகவும், தயவுக்காகவும் மன்றாடுவான். அப்படிபட்டவன் அவரின் சிநேகிதனாகவும் மாறுகின்றான்.
கற்பனைகளைக் கைக்கொள்ளும் அன்புடையவர்களாயிருந்து தமது கீழ்படிதலை அவர் முன்னிலையில் அன்றாட பணிகளினூடே காண்பிப்போம்.
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 1யோவான் 3:14-22.