என்னிடத்தில் அன்பாயிருக்கிறவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
he who loves Me will be loved by My Father, and I will love him and manifest Myself to him. (John 14:21)
Act18:9-11; Act 22:18; 2 Corinthians 3:18; 2 Corinthians 4:6; 2 Corinthians 12:8,9; 2 Timothy 4:17,18; 1John 1:1-3; Revelation 2:17; Revelation 3:20.
என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். (யோவான் 14:21)
அப்போஸ்தலர் 18:9-11; அப்போஸ்தலர் 22:18; 2கொரிந்தியர் 3:18; 2கொரிந்தியர் 4:6; 2கொரிந்தியர் 12:8,9; 2தீமோத்தேயு 4:17,18; 1யோவான் 1:1-3; வெளி 2:17; வெளி 3:20.
வெளிப்படுத்துவேன்:
கர்த்தராகிய இயேசுவின் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு சில நிபந்தனைகள் தரப்பட்டுள்ளன. அவையாவன:
கிறிஸ்துவின் வசனங்களை நாம் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
பெற்றுக்கொண்ட வசனங்களை கைக்கொண்டு அதன்படி வாழ வேண்டும்.
வசனங்களைக் கைக்கொண்டு நாம் அவரை நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
கிறிஸ்துவை நேசித்து கிறிஸ்துவின் பிதாவின் அன்புக்குரியவர்களாய் மாற வேண்டும்.
பிதாவின் அன்புக்குரியவன் மீது குமாரனாகிய இயேசுவும் அன்பாயிருப்பதை அறிவிக்கின்றார்.
இப்படிப்பட்ட நிலைபாட்டுக்கு வரும் சீஷனும் ஊழியக்காரனும் தேவ பிள்ளைகளும் கிறிஸ்துவைக் கண்ணார காணும் கண்களையும், மனதார அறியும் மனதையும் அடைந்து அவரை இன்னாரென்று அறிகின்றார்கள்.
பேதுருவிடம் கூறும்போது மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகிலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று இயேசு கூறுகின்றார்.
தேவனுடைய ஜனமாகிய நாம் நம் இயேசுவைக் குறித்த தெளிவான அறிவை அடைய வேண்டும். இந்த அறிவை அடைய கல்வியோ, திறமைகளோ அல்லது தேவன் நமக்கு தந்துள்ள ஆவியினால் உண்டாகின்ற வெளிப்பாடே தேவையாகின்றது. அவர் தம்மை வெளிப்படுத்த சித்தமில்லாதிருக்கும்போது நாம் அவரை அறியவும் முடியாது, காணவும் முடியாது. விவிலிய ஞானம் நம்மை ஒரு எல்லை வரை மட்டுமே கொண்டு போகும். எல்லாவிதமான உபகரணங்களைக் கொண்டு நாவரங்களை வெளிப்படுத்தலாம்.
அவருக்காய் வைராக்கியம் பாராட்டலாம். ஆனால் அவருடைய ஆவியைக் கொண்டுதான் தேவனுடைய ஆழங்களையும், குமாரனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவையும் அறிய முடியும். பரத்திலிருந்து வருகிற ஞானம் அல்லது வேறு ஞானத்தால் நாம் இயேசுவை அறிய இயலாது.
எல்லா வெளிபாடுகளும் வீண். அவரிடமிருந்து வரும் வெளிப்பாடே திறந்த வாசலாகும்.
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1கொரிந்தியர் 2:9-15.