இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்கு தெரியாது

இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்கு தெரியாது.

But by what means he now sees we do not know,or who opened his eyes we do not know. (John 9:20,21)

Ex10:25; 1Sam3:17; 1sam17:25; Ecc11:2; Zec4:5; Mt5:37; Mt10:27; Mt21:27; Mt26:70; Jn3:8; Jn9:25; Act23:5; Eze33:1-16.

தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். (யோவான் 9:20)

இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது, இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள்,இவனே சொல்லுவான் என்றார்கள். (யோவான் 9:21)

யாத்திராகமம் 10:25; 1சாமுவேல் 3:17; 1சாமுவேல் 17:25; பிரசங்கி 11:2; சகரியா 4:5; மத்தேயு 5:37; மத்தேயு 10:27; மத்தேயு 21:27; மத்தேயு 26:70; யோவான் 3:8;9:25; அப்போஸ்தலர் 23:5; எசேக்கியேல் 33:1-16.

எங்களுக்கு தெரியாது:
தங்களுக்கு இன்னது உண்மை என்று தெரிந்திருந்தும் ‘தெரியாது’ என்று கூறிய குருடனின் பெற்றோர்களை போலவே இக்காலத்திலும் சாக்குபோக்கு சொல்லும் விசுவாச மக்கள் பெருகிவிட்டனர்.
தேவன் செய்தவைகளைத் தெரியாது என்று கூறுவதினால் உண்மையை மறைக்கிறோம், உண்மையை மறுக்கிறோம் என்ற குற்றசாட்டுக்குள் வருகின்றோம்.

உலக நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதினால் குற்றவாளியாகின்றோம். மனித சமுதாயத்துக்குள் உண்மையை மறைப்பதினால் மனசாட்சியில் குத்தப்படுகின்றோம் – பொய்யராகின்றோம். ஆவிக்குரிய வாழ்வில் உண்மையை மறைப்பதினால் தேவ இராஜ்ஜியத்தினால் குற்றவாளியாக்கப்படுகின்றோம்.

தேவனுடைய கிரியைகளும், வெளிப்பாடுகளும் மறைக்கப்படுவதற்காகவோ, தெரியாது என்று சொல்லுவதற்காகவோ கொடுக்கப்படுவதில்லை. வெளியரங்கமாக்குவதற்காகவே தரப்படுகின்றது.

அறைவீட்டில் சொல்லுவதை கூரையின்மேல் பகிரங்கபடுத்த வேண்டும் என்று இயேசு கூறியுள்ளார்.

தெரியாது என்று சொல்லி தப்பித்து கொள்ளலாம். ஆனாலும் தேவன் அவைகளை வெளிபடுத்தும் நேரம் ஆபத்தானதாகவே காணப்படும்.
உள்ளதை – அறிந்ததை உள்ளதென்றும், தெரியுமென்றும் சொல்ல வேண்டும். இல்லாததை – அறியாததை இல்லையென்றும், தெரியாது என்றும்சொல்ல வேண்டும் என்று இயேசு கூறியுள்ளார்.

விசுவாசபாதை என்பது உண்மையை உரக்கமாய் கூறுவதாகும். தெரியாததை தேவனிடம் கேட்டு தெரிந்து கொள்வதாகும். அறிந்ததை பிரபல்யபடுத்துவதாகும்.

ஒருவரின் தவறுகளை – பாவங்களையல்ல தேவன் செய்யும் கிரியைகளை பிரபல்யபடுத்துவதே தேவன் விரும்புவதாகும்.

கர்த்தாவே நீங்கள் எங்களுக்கு செய்வதை குறித்த திறந்த மனசாட்சியில்லாது வாழாது திறக்கபட்ட இருதயம் உள்ளவர்களாக வாழ உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME