உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்

உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.

Do not marvel, my brethren, if the world hates you. (1John 3:13)

Matthew 10:22; Matthew 24:9; Mark 13:13; Luke 6:22; Luke 21:17; John 7:7; John 15:18,19; John 16:2,33; John 17:14; Romans 8:7; 2Timothy 3:12; James 4:4.

என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
(1 யோவான் 3:13)

மத்தேயு 10:22; மத்தேயு 24:9; மாற்கு 13:13; லூக்கா 6:22; லூக்கா 21:17; யோவான் 7:7; யோவான் 15:18,19; யோவான் 16:2,33; யோவான் 17:14; ரோமர் 8:7; 2தீமோத்தேயு 3:12; யாக்கோபு 4:4.

நாம் பகையாளிகள்.

கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இயேசு கிறிஸ்துவினால் பாவம் போகக் கழுவப்பட்டு, மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் சரீரமாகிய ஐக்கியத்துக்குள் வாழ்கிறவர்கள் உலகத்தால் பகைக்கப்படுகிறார்கள். ஆகவே நாம் இவ்வுலகத்தாருக்கு பங்காளிகள் அல்ல, பகையாளியாக இருக்கிறோம்.

பகை என்ற தன்மை தேவனுடைய பிள்ளைகளிடமிருந்து வருவதில்லை. ஏனெனில் பகையாக நின்ற தடுப்பு சுவரை உடைத்து தேவ பிள்ளைகள் தேவனோடு சமாதானம் பெற்றிருப்பதினால் சாந்தமுள்ள ஆவியும், அன்பின் ஆவியும் உடையவர்களாக இருப்பர். உலகமும் அதன் கிரியைகளும் அழிவுக்கு வைக்கப்பட்டுள்ளதினால் தேவனையும் தேவனுடைய பிள்ளைகளையும், தேவனுடைய சபையையும் அது பகைக்கிறது. இந்த உலகமானது மாம்சத்தையும் பாவத்தையும் பிசாசையும் தனது கூட்டாண்மைக்குள் வைத்துக்கொண்டு எதிர்த்து நிற்கின்றார்கள். ஆகையினால் தேவனுடைய பிள்ளைகளை உலகமே பகைக்கிறது.

இந்த பகை உணர்வைக் குறித்து தேவனுடைய பிள்ளைகள் பயப்படலாகாது. ஆச்சரியபடலாகாது, ஏனென்று கேள்வி கேட்கலாகாது. ஏனென்றால் உலகமும் அதன் இச்சைகளும் ஒழிந்து போவதற்காகவும், எரிந்து போவதற்காகவும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவனுடைய பிள்ளைகள் உலகத்தாரல்ல, உலகத்திலே ஐக்கியம் கொள்ளுகிறவர்களுமல்ல, தேவனுடையவர்கள். உலகமானது தேவனுடைய பிள்ளைகளின் பரிகாரியாகிய இயேசு கிறிஸ்துவையும் பகைத்தது. ஆகவே அது நம்மை பகைப்பதற்காகவே வைக்கப்பட்டுள்ளது.

தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் தான் இருக்கிறார்கள். இங்கேதான் பிறந்தோம். இங்கேதான் நாம் வளர்கிறோம். இங்கேதான் நாம் மரணமடைகிறோம். ஆகையினால் மண்ணிலிருந்து தோன்றிய நாம் இந்த மண்ணுக்கே திரும்புவதினால் இடைப்பட்ட காலத்தில் இந்த உலகத்தோடும், மண்ணோடும், இயற்கையோடும் ஒத்துப்போக வேண்டும் என்ற உணர்வுகள் தேவனை பகைத்து உலகத்தை சிநேகிக்க வைக்கும் உபதேசங்கள். நாம் இங்கே வாழ்ந்தாலும் இந்த உலகத்துக்குரியவர்களாக வாழாது பரலோகத்துக்குரியவர்களாகவே வாழ வேண்டும். உலக வாழ்வுக்கான பயன்பாட்டுக்கு இவ்வுலகை நாம் பயன்படுத்தி கொள்ளவேண்டுமேயொழிய நாம் முற்றிலும் தேவனை சார்ந்து வாழவேண்டியவர்களாயிருக்கிறோம்.

நாம் உலகத்தால் ஜெயிக்கப்படாதபடிக்கு வாழவே இயேசு போதித்துள்ளார். நாம் உலகத்தை ஜெயிக்கவே போதிக்கப்பட்டுள்ளோம். ஏனெனில் இயேசு உலகை ஜெயித்தார். ஆகவே பகையாளியாகிய உலகத்தோடு பங்காளித்துவம் கொள்ளாதபடி தேவனோடு இணைந்து வாழ்கிறவர்களாக காணப்படுவோமாக.

கேள்வி. உலகம் நமக்கு பகை என்றால் உலக ஐசுவரியத்தை நாடுவதும் பகையாகத்தானே கானப்படும்?

நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.

நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். 1கொரிந்தியர் 5:7-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME