மனுஷகுமாரனும்

மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.

must the Son of Man be lifted up, (john 3:14)
Jn8:28; Jn12:32-34; Lk18:31-33; Lk24:26,27,44-46; Act2:23-25; Eph2:6,7; Ps22:16.

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:14)

யோவான் 8:28; யோவான் 12:32-34; லூக்கா 18:31-33; லூக்கா 24:26,27,44-46; அப்போஸ்தலர் 2:23-25; எபேசியர் 2:6,7; சங்கீதம் 22:16.

இயேசு உயர்த்தபடல்
உயர்த்தபடுதல் என்பது…
– சிலுவையில் உயர்த்தபடல்.
-மரணத்தினின்று உயிர்ப்பிக்கபடல்.
– பரத்துக்கு ஏறிச் செல்லுதல்.
– எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தபடல்.
– பூமியிலே இராஜாவாக அரசாளும்படி உயர்த்தபடல் என்பதை குறிக்கும்.

ஆனால் இங்கு சிலுவை மரணத்தையே குறிக்கின்றது.
– சிலுவை மரணம் என்பது விதியின் விளையாட்டல்ல.நியாய பிரமாண விதிகளுக்குட்பட்டது.
– சிலுவை மரணம் இயேசு வாஞ்சித்ததல்ல, தேவன் கட்டளையிட்டது. லூக்கா 22:42
– சிலுவை மரணம்ஆதியாகமம் 3:15 லே வாக்களிக்கப்பட்டது.
– சிலுவை மரணம் குறித்து இயேசு பிரசங்கித்தார்.
– சிலுவைக்கு தம்மை முழு மனதுடன் ஒப்புக்கொடுத்தார்.
– சிலுவை பாடுகள் பாவத்துக்கும் மீட்புக்கும் இடைபட்ட தேவ ஏற்பாடு என்று உரைத்தார்.
– தமது சீஷர்கள் சிலுவை சுமந்து வர வேண்டும் என்றே போதித்தார்.
– சிலுவையில் தொங்குதல் வானம் பூமிக்கு நடுவாக தொங்குதல் – பூமியிலிருந்து உயர்த்தபடுதல்.
– சிலுவை மரணமேஅநேகரை தம்மண்டை இழுத்துக் கொண்டது.

சபையானது…
– சிலுவை குறித்து பிரசங்கிக்க வேண்டும். 1கொரிந்தியர் 1:17,18.
– விசுவாசி சிலுவையில் அறையபட்ட அனுபவமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
– சிலுவை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும். கலாத்தியர் 6:14
– சிலுவை பாதையை விரும்பாதவர்கள் தேவ ராஜ்யத்தின் பங்காளிகளல்ல. கலாத்தியர் 6:12

கர்த்தாவே, உமது சிலுவையை குறித்தே அல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டவோ, பிரசங்கிக்கவோ செய்யாதபடியிருக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME