பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.
Jesus said,Peace to you! As the Father has sent Me, I also send you. (John 20:21)
John 13:20; John 17:18,19; John 21:15-17; Matthew 10:16,40; Matthew 28:18-20; Mark 16:15-18; Luke 24:47-49; Acts 1:8; Hebrews 13:1; Isaiah 63:1-3.
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, (யோவான் 20:21)
யோவான் 13:20; யோவான் 17:18,19; யோவான் 21:15-17; மத்தேயு 10:16,40; மத்தேயு 28:18-20; மாற்கு 16:15-18; லூக்கா 24:47-49; அப்போஸ்தலர் 1:8; எபிரெயர் 13:1; ஏசாயா 63:1-3.
உங்களை அனுப்புகிறேன்.
பிதா தமது குமாரனாகிய இயேசுவை பாவத்தினிமித்தம் சபிக்கப்பட்ட பூமியில், சபிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அனுப்பினார். பரலோக தேஜஸோடு அல்ல, மனிதனின் தேஜஸோடு அனுப்பினார். ஆகையினால் மனிதனை மீட்க இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தை எடுத்துக்கொண்டார். ஆனால் மனிதனில் காணப்பட்ட பாவதன்மைகளையோ, மிருகத்தின் தன்மைகளையோ, மனுகுலத்தின் தூய்மையற்ற கலாச்சாரங்களையோ சுவீகரித்துக் கொள்ளவில்லை. தந்தையின் சொற்படி தமது விருப்பப்படி சீஷர்கள் நடந்துக்கொள்ள வேண்டுமென்றே போதித்தார்.
இயேசு கிறிஸ்து பிதாவினால் முன்குறிக்கப்பட்ட, தம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்ட சீஷர்களை தமது பணியை செய்யும்படியாகவும், தம்மைபோலவே நடந்துக்கொள்ளும்படியாகவும் அனுப்பினார். அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட ஆவியானவரை கொண்டு கிறிஸ்துவின் சுவிசேஷம் கலப்படமாகாதபடிக்கும், கிறிஸ்துவை அவர் விரும்பியபடியே பின்னாட்களில் கொடுத்தார்கள்.
இயேசுவால் அனுப்பப்படுகிறவர்களாகிய சீஷர்கள் அப்போஸ்தலர் எனப்படுகிறார்கள். அதாவது, தேவனாலும், கிறிஸ்துவாலும், பரிசுத்த ஆவியியனாலும் அனுப்பப்படுகிறவர்கள் என்று பொருளாகும். கிறிஸ்துவையும், கிறிஸ்துவை பற்றியும், கிறிஸ்து போதித்தவைகள் செய்தவைகள் குறித்தும் பேசும்படியாக அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் தங்களிஷ்டம்போல் நடந்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இவர்களுக்குரிய பாதுகாப்பும், இவர்களுக்குரிய தேவைகளும் கூட இருக்கும்படியாக கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த ஆவியினாலே சந்திக்கப்படும். இவர்கள் பேச வேண்டியதையும் ஆவியானவரே தீர்மானிக்கின்றார். கலாச்சாரங்களோ, இஸங்களோ, இயக்கங்களோ தீர்மானிக்கமுடியாது. கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டுமானால் அதை தீர்மானிப்பவர் அனுப்படுகிறவர்களல்ல ஆவியானவரே.
பிதா தெரிந்தெடுத்தார், கிறிஸ்து அனுப்புகிறார், ஆவியானவர் கூட இருக்கிறார். எதற்காக? எங்கே? எப்பொழுது? எப்படி? என்பதை பிதாவே தீர்மானித்துள்ளார். தமது மகனை மகிமைபடுத்தும்படிக்கும், உயர்த்தும்படிக்கும் பிதா தீர்மானித்துள்ளார். அவ்விதம் கிறிஸ்து அறிவிக்கப்பட்டு தேவனை அறியாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள்வந்தடையும்போது பிதாவாகிய தேவன் தமது ஆசீர்வாதங்கள் யாவையும் இவர்களுக்கும் கொடுத்து இவர்களின் சாபங்களை முற்றிலுமாக நீக்கிப்போடுகிறார். இப்பொழுது இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாயிருப்பதினால் இவர்களை கிறிஸ்துவுக்குள் தமது ஜனமாக்கிக்கொள்கிறார். இரட்சிக்கப்பட்ட இவர்கள் திரும்பவும் பிதாவினால் தெரிந்துக்கொள்ளப்பட்டு கிறிஸ்துவால் இவ்வுலகிற்குள் அனுப்பப்டுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் இவர்களோடிருந்து கிரியை நடப்பித்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை கிராமங்கள், பட்டணங்கள் தோறும் ஸ்தாபிக்கிறார்.
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள். உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது; எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள். மத்தேயு 10:6-16.