இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்

இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

But Jesus said,Let her alone; she has kept this for the day of My burial. (John 12:7)

Jn19:38-42; Mt26:10,12; Mt27:57-60; Mk15:42-47; Mk14:6,8; Lk23:50; Gen50:2; Ps109:31; Zec3:2.

அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். (யோவான் 12:7)

யோவான் 19:38-42; மத்தேயு 26:10,12; மத்தேயு 27:57-60; மாற்கு 15:42-47; மாற்கு 14:6,8; லூக்கா 23:50; ஆதியாகமம் 50:2; சங்கீதம் 109:31; சகரியா 3:2.

நற்கிரியைகளை செய்ய நாம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். எபேசியர் 2:10.

இயேசுவை உளபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் நேசித்த மரியாள் செய்த இந்த செயல் நற்கிரியைக்கானது என்றும், இயேசுவை அடக்கம்பண்ண முந்திக்கொண்ட செயல் என்றும் நாம் இப்பகுதியிலிருந்து அறிய முடிகின்றது. மாற்கு 16: 1 ல் சில பெண்கள் இயேசுவின் சரீரத்துக்கு சுகந்தவர்க்கமிட முடிவு செய்த செயல் இந்த மரியாளின் தூண்டுதலின் பேரிலே நடந்திருக்கக்கூடும். மாற்கு14:6 ல் அவள் என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது.

இயேசுவை உண்மையாய் நேசிப்பவர்கள் நற்கிரியைகள் செய்கிறவர்களாகவும், இயேசுவின் மரணத்தில் பங்கு கொள்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். உண்மையான அன்பு நற்கிரியைகளை செய்ய தூண்டும். வாயினில் காட்டும் அன்பு நற்கிரியைகளை செய்ய தூண்டாது.
எப்படிபட்ட நற்கிரியைகள் செய்ய கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது?

இல்லாமையிலும் நற்கிரியை செய்ய முன்வருவது…
பலவீனத்திலும், உபத்திரவத்திலும் நற்கிரியை செய்ய முயற்சிப்பது.
எல்லாம் இருக்கும் போதும் நற்கிரியை செய்வது.

எதிராளியாயிருந்தாலும் நற்கிரியைகளை செய்ய முன்வருவது.
தன்னை வஞ்சித்தவனுக்கும், தன்னிடமுள்ளதை பறித்தவர்க்கும் நன்மை செய்வது.

பிறர் எனக்கு நற்கிரியை செய்யாதிருந்தாலும் யாம் அவருக்கு நற்கிரியை செய்வது.

மக்கதோனியா சபையார் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரில் பற்றுதலாயிருந்தனர் என்பதை நற்கிரியைகளினால் வெளிப்படுத்தினர். ரோமர் 15:26,27. மக்கத்தோனியா, அகாயா சபைகள் பொருள் சகாயம் செய்யும் சபைகளாகக் காணப்பட்டனர். 2கொரிிந்தியர் 9:1-4. இவர்கள் தாராளமாய் வைத்திருந்ததினால் அல்ல, தங்கள் குறைவுகளிலும், தரித்திரத்திலும் நற்கிரியைகளை – பொருள் சகாயத்தை செய்தனர்.

ஊழியக்காரனாகிய பவுலுக்கும், அவன் கூட்டத்தாருக்கும் ஒருசில சபைகள் மாத்திரமே பொருள் சகாயம் செய்து உதவி செய்தது. பிலிிப்பியர் 4:15. தேவனுடைய பிள்ளைகளின் தேவைகளின் மத்தியில் தரித்திரத்திலும், குறைவிலும் நற்கிரியைகள் செய்து உதவும்படியாகவே அவர்கள் ஞான நன்மைகளை விதைக்கிறார்கள்.

மரியாளை விட்டு விடுங்கள். நற்கிரியை செய்ய முடியாவிட்டாலும், செய்பவர்களை தடுக்காதீர்கள்.

அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். 2கொரிந்தியர் 8:2

ADD YOUR COMMENT

Powered By Indic IME