அவர் கேள்விப்பட்டபின்பு அங்கே இரண்டுநாள் தங்கினார்.
when He heard that he was sick, He stayed two more days in the place where He was. (John 11:6)
Isa30:18; Isa55:8,9; Mt8:24; Mt15:22-28; Jn7:8; Isa54:7-10; 1Pet5:6; 2Pet3:9,15.
அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். (யோவான் 11:6)
ஏசாயா 30:18; ஏசாயா 55:8,9; மத்தேயு 8:24; மத்தேயு 15:22-28; யோவான் 7:8; ஏசாயா 54:7-10; 1பேதுரு 5:6; 2பேதுரு 3:9,15.
தாமதிக்கும் தேவன்:
மரியாளின் குடும்பம் தெரிவித்த தகவலை பெற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்து இரண்டு நாட்கள் தாமதம் செய்தார். ஏன் அவர் தாமதம் செய்தாரென்றால் தேவ மகிமை வெளிப்படுவதற்காக வேண்டியே தாமதம் செய்தார் என்று அறியலாம். இந்த தாமதம் மரியாள் குடும்பத்தை மேலும் மேலும் வேதனையடையவும், நம்பிக்கையிழக்கவும் தக்கதாய் நடத்தியது. இதை போலவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையும் தாமதம் ஆவதினால் கிறிஸ்தவ விசுவாசம் கேள்விகுறியாகி வருகிறது. ஒழுக்க நெறிமுறைகள் குறைந்து காணப்படுகின்றன. எல்லாரும் தலைவர்களாக மாற பார்க்கின்றனர். கீழ்படிதலும், அடங்கிபோகுதலும் இல்லை. இதனால்தான் அவர்வரும்போது விசுவாசத்தை காண்பாரோ என்று கூறப்பட்டுள்ளது.
தாமதம் செய்வதினால் நாம் பலவீனப்பட்டவர்களும், விசுவாசமிழந்தவர்களும் ஆவோமெனில் நமது நம்பிக்கை உண்மையானதாக இருந்திருக்கவில்லை என்றே பொருளாகும். நம்மை சோதித்துப்பார்க்கும்படியாகவே சில தருணங்களில் அவர் தாமதம் செய்கிறார் என்று அறியலாம்.
கிறிஸ்து அவருடைய வேலையில்தான் கிரியை செய்கிறார். நாம் அவருடைய வேளையில் இடைபடுகிறவர்களாக மாறிவிட்டோமெனில் தாமதம் செய்கிறார் என்று கூறமாட்டோம். அவரோடு ஒத்துபோவதே விசுவாச வாழ்க்கை. அவரோடு இணைந்து பணியாற்றுவதே உயரிய அனுபவம். எல்லா கிரியைகளும் அதனதன் நேரத்தில்தான் நடப்பிக்கப்படும். அந்த நேரமும் வேளையும் அறிந்துகொண்டு நடப்பதே ஆவிக்குரிய வாழ்க்கை. பொறுமை இல்லையெனில் ஆவிக்குரிய வாழ்வில் பெலன் கொள்ள இயலாது.
நமது விசுவாச வளர்ச்சிக்கு தகுந்தபடியே அவர் தாமதம் செய்கிறார். நமது செயல்பாடுகள்தான் அவரை செயல்படும்விதமாகவோ, மட்டுபடுத்துவதாகவோ காணப்படும்.
கர்த்தாவே நீர் எங்களில் உண்மையான மாற்றம் நிகழ்வது வரையிலும் உமது மகனை தாமதம் பண்ண வைக்கிறீர் என்று நாங்கள் அறிந்து உண்மையாய் உம்மை பின்பற்ற உதவிடும்.