இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்று அறியாதிருந்தனர்.
yet they did not know the Scripture, that He must rise again from the dead. (John 20:9)
Matthew 16:21,22; Mark 8:31-33; Mark 9:9,10,31,32; Luke9:45; Luke 18:31-34; Luke 24:13-31,44-46; Psalms 16:10.
அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள். (யோவான் 20:9)
மத்தேயு16:21,22; மாற்கு 8:31-33; மாற்கு 9:9,10,31,32; லூக்கா 9:45; லூக்கா 18:31-34; லூக்கா 24:13-31,44-46; சங்கீதம் 16:10.
அறியாது இருந்தார்கள்.
அறிதல் என்பதற்கு பார்த்தல், தெரிந்துகொள்ளுதல், கவனித்து அறிதல் என்று பொருளாகும். இரு சீஷர்களும் இந்த மூன்று விதங்களிலும் அறியாமை உடையவர்களாய் இருந்தனர்.
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்ற வாக்கியத்தை சீஷர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் பேசியதை காது குளிர கேட்டார்கள். பல இடங்களிலும் இதை தெரிவித்திருந்தார் இயேசு. தனிப்பட்ட முறையிலும் அறிவித்திருந்தார். அந்த வாக்கியங்களை நினைவில் வைத்திருக்கவில்லை. அதன் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. அப்படி நடக்கும் என்று விசுவாசிக்கவில்லை. அதற்கென்று தங்களை ஆயத்தப்படுத்துவும் இல்லை. ஆகையினால் தான் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்த பின்பும் சீஷர்கள் அதை குறித்து சீரியஸாக எடுத்துக் கொள்ளவுமில்லை. அதைக்குறித்து பிரமிப்படையவுமில்லை. தேவனுக்கு மகிமை செலுத்தவும் இல்லை.
இயேசுகிறிஸ்து மரித்தவர்களின் கூட்டத்தில் காணப்பட்டார். மரித்த இயேசு மரித்தவர்களோடு இருந்தார். அந்த இடம் பரதீசு என்று கூறுகின்றார் லூக்கா. மரித்தவர்களோடு இருக்கையில் என்ன செய்தார் என்பதை 1பேதுரு 3:18 ன் ப்டி தம்மைக் குறித்து வேத வாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது நிறைவேறிவிட்டது என்பதை பிரசங்கித்து இருக்க கூடும். அவர்கள் இவரை நம்பும்படியாக மரித்தவர்கள் மத்தியிலிருந்த இயேசுவை அவர்கள் காணும்படியாக பரலோகத்திற்கு நேராக தேவன் உயர்த்தினார். இதனை பேதுரு அப்போஸ்தலர் 2:22 – 36 ல் தெரிவிக்கின்றார். அவர் உயிர்பெற்றெழுந்ததை பரதீசிலுள்ளவர்கள் மட்டுமல்ல இயேசுவோடு கூட இருந்த அவரின் சீடர்கள் யாவரும் கண்டனர் . அவர்கள் அதை கண்டு, அனுபவித்து, விசுவாசித்து, தங்களின் இரத்த ஆணிகளினால் எழுதி வைத்தார்கள். இரத்த சாட்சிகளின் ஆணிகளின் கூர் உலகிலுள்ள எத்தகைய அழிக்கும் சக்தியினாலும் அழிக்க இயலாது.
இன்று இவர்கள் அறியாதிருந்தது உண்மைதான். அப்படியிருந்த இவர்கள்தான் பிரசங்கித்தவர்களும், எழுத்தாளர்களும், இரத்த சாட்சிகளாய் உயிர்த்த கிறிஸ்துவுக்காய் மரித்தவர்களுமாய் மாறினார்கள்.
அன்பானவர்களே நாம் விசுவாசிப்பதற்கு அரிதானவைகளாக இவைகள் காணப்படலாம். நாம் பிரசங்கித்தும் விசுவாசிக்காத கூட்டம் இருக்கலாம். ஆனால் விசுவாசிக்காத இவர்களே எழுத்தாளர்களாகவும் சாட்சிகளாகவும் மாறுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
இயேசு மரித்தவர்களின் கூட்டத்தில் இல்லை. இனி அங்கு அவரை தேடவேண்டாம். ஜீவன் உள்ளோர் கூட்டத்திலே அவரை தேடுவோம். அவர் நமக்கு தென்படுவார்.
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. 1கொரிந்தொயர் 15:3-8.