இயேசு மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது

இயேசு: மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது.

But Jesus answered,The hour has come that the Son of Man should be glorified. (John 12:23)

Jn13:31,32; Jn17:1-5,9,10; Mat25:31; 1Pet2:9,10; Isa49:5,6; Isa53:10-12; Isa55:5; Isa60:9.

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது. (யோவான் 12:23)

யோவான் 13:31,32; யோவான் 17:1-5,9,10; மத்தேயு 25:31; 1பேதுரு 2:9,10;ஏசா49:5,6;53:10-12;55:5;60:9.

இயேசு மகிமைபடுகிறார்.
இயேசுகிறிஸ்து ஒருபோதும் தனக்கு மகிமையை தேடவில்லை. புகழ்ச்சியை தேடவில்லை. பெயர் பிரஸ்தாபத்தை தேடவில்லை. பிதாவை மகிமைப்படுத்துவதே அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது. ஏனெனில் பிதா தன்மீது கொண்டிருந்த நோக்கத்தை விட்டுவிலகும்படியான சோதனையே சுயமகிமை என்பதை நன்றாக அறிந்திருந்தார். ஆனாலும் யூதர்களை தவிர்த்து புறஜாதியாரிடையில் இருந்து இயேசுவை காணவிரும்பி வந்திருக்கும் செயலானது பிதாவின் நோக்கத்தை பிரதிபலிக்கின்றதாயுள்ளது. புறஜாதியாரிடையில் பாவம், சாத்தான், இருள் போன்றவை மலிந்து காணப்பட்டு பிதாவை காணவியலாதுபோயிருந்த நிலையில் இயேசுகிறிஸ்துவின் பிரசங்கமும், நற்கிரியைகளும், வாழ்க்கையும் அவர்களுக்குள் – அவர்களின் சிந்தைகளுக்குள் புகுந்து அவர்களை உள்ளகிளர்ச்சியடைய செய்திருப்பது இயேசுகிறிஸ்துவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது. இயேசு மகிமைப்படுவதினால் பிதா தொழுகை செய்யப்படுவார் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு ஆகும். நம் மூலமாய் இயேசு மகிமைப்படுத்தபடுவதே பிதாவானவர் தொழுகை செய்யபடுவதற்கு ஏதுவாகும். நம்மில் அவரின் பரிசுத்தத்தை தூய்மைபடுத்துவதே கிறிஸ்து மகிமைபடுவதாகும். நமது செயல்களையும், பேச்சையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றியமைப்பதே அவரை நம்மில் பரிசுத்தப்படுத்துவதாகும். ஊழியகாரர்களினாலும், விசுவாசிகளினாலும் இயேசு மட்டுமே மகிமைபட வேண்டும். இயேசு இங்கே மகிமைபட்டால் உங்களுக்குரிய மகிமையும், புகழ்ச்சியும் அங்கே உண்டாயிருக்கும்.
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு5:16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME