இயேசு நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ

இயேசு: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ?

Jesus:Are you speaking for yourself about this,or did others tell you this concerning Me? (John 18 :34)

Matthew 5:8; Matthew 9:4; Matthew 12:34,35; Matthew 13:15; Matthew 15:18,19; Mark 11:23; Luke 16:15; Luke 21:34; Luke 24:25; John 12:40; Act 5:3; Act 8:21.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். (யோவான் 18:34)

மத்தேயு 5:8; மத்தேயு 9:4; மத்தேயு 12:34,35; மத்தேயு 13:15; மத்தேயு 15:18,19; மாற்கு 11:23; லூக்கா 16:15; லூக்கா 21:34; லூக்கா 24:25; யோவான் 12:40; அப்போஸ்தலர் 5:3; அப்போஸ்தலர் 8:21.

உன் இருதயத்தில் இருப்பது என்ன?

நீர் யூதருடைய இராஜாவா என்று கேட்ட பிலாத்துவின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புகின்றார் இயேசு. உமது இருதயத்தின் எண்ணமா அல்லது பிறர் சொன்னதைக் கேட்டு நீர் சொல்லுகிறீரா என்று கேட்கின்றார். ஆனால் அடுத்த வசனத்தைப் பார்க்கும்போது இயேசு யூதருடைய இராஜா என்று தன் இருதயத்தில் நம்பவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்று அறிகின்றோம்.

கர்த்தராகிய இயேசு மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அறிகின்றவர். காரணம் நமது இருதயத்தை – உள்ளத்தை உருவாக்கினவர். மேலும் அவரே நம் இருதயத்தை கட்டுப்படுத்துகின்றவர். பெரியவர்களோ, சிறியவர்களோ, படித்தவர்களோ, படியாதவர்களோ எப்படிபட்டவர்களாயிருந்தாலும் அவர்களின் இருதயத்தின் நினைவுகளை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படுகிறவர். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.

அவர் நம் உள்ளத்தில் இருப்பதை அறிந்திருப்பதினால் தேவபிள்ளைகளாகிய நாம் நம் இருதயத்தை அவர் முன்னிலையில் திறந்து காண்பிக்கவும், திறந்து வைக்கவும் பழகியிருக்க வேண்டும். கிறிஸ்தவ உலகில் அனேக தப்பறை உபதேசங்களுக்கும், பாவங்களுக்கும், அக்கிரமங்களுக்கும், பொல்லாப்புகளுக்கும் அடிப்படை காரணம் தங்கள் இருதயம் தேவன் முன்னிலையில் திறக்கப்படாமலும், செம்மையாயிராமலும் இருப்பதுவே காரணமாகும். நாம் நம் இருதயத்தை திறந்து காண்பிப்பதற்காகவே தனி ஜெபம் என்ற அணுகுமுறை ஆதியிலிருந்து தேவ மனிதர்களிடையில் நடைமுறையில் காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் அனேக பக்தர்கள் தங்கள் இருதயத்தை திறந்து வைத்து பழகியிருந்தார்கள். புதிய ஏற்பாட்டு காலத்திலும் இந்த பழக்கம் காணப்பட்டது.

ஆனால் சமீப காலங்களாக தேவ மனிதர்களின் இருதயம் தேவன் முன்னிலையில் செம்மையாயிராத காரணம் திறக்கப்பட்ட இருதயம் இல்லாதவர்களாயிருப்பதுவே.

நாம் நம் இருதயத்தை திறந்து காட்டவில்லையெனில் அவர் நம் இருதயத்தை திறந்து பார்த்து அதினுள் இருப்பதை ஆராய்ந்து அதற்கேற்றப்படியே நியாயந்தீர்ப்பார். அடிவாங்கி இருதயத்தை திறந்து காட்டுவதைவிடவும் அன்றாடம் அவர் முன்னிலையில் நம் இருதயத்தை திறந்து வைத்து வாழுவோமெனில் அவர் நம்மை நம்பி நற் பொருளை நம்மிடம் தருவார்.

அன்பானவர்களே, நம் இருதயத்தில் இருப்பது என்ன என்பதை அவர் அறிந்து அதனை அவர் அப்புறப்படுத்த இடம் கொடுப்போமாக. இருதயத்தை அவர் சுத்தம் செய்யட்டும். இல்லையெனில் நம் வழியிலே அவர் நம்மை விட்டுவிடுவார்.

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் 1:21-28.

ADD YOUR COMMENT

Powered By Indic IME