இயேசு தாகமாயிருக்கிறேன் என்றார்

இயேசு தாகமாயிருக்கிறேன் என்றார்.

Jesus, knowing all things were now accomplished,Scripture might be fulfilled,said,I thirst. (John 19:28)

John 13:1; John 18:4; Psalm 22:15; Psalm 69:21; Judgement 4:19; Psalm 42:2; Psalm 63:1; Psalm 143:6; Isaiah 49:10; Isaiah 55:1; John 7:37; Romans 12:20; Revelation 21:6; Revelation 22:17.

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.(யோவான் 19:28)

யோவான் 13:1; யோவான் 18:4; சங்கீதம் 22:15; சங்கீதம் 69:21; நியாயாதிபதி 4:19;சங்கீதம் 42:2; சங்கீதம் 63:1; சங்கீதம் 143:6; ஏசாயா 49:10;55:1; யோவான் 7:37; ரோமர் 12:20; வெளி 21:6; வெளி 22:17.

தாகமாயிருக்கிறேன்:
இயேசுகிறிஸ்து தாகமாயிருக்கிறேன் என்று கூறிய கூற்றோடு இரு காரணகாரியங்களும் அடங்கியுள்ளதை இவ்வசனத்தில் காண்கின்றோம். 

முதலாவது, இயேசுகிறிஸ்து எல்லாம் முடிந்தது என்று அறிந்தார். தனக்கு தேவன் நியமித்த மனுஷீக ஓட்டம் முடிவு பெற்றதை அறிந்தார். தேவனுடைய இரட்சண்ய கிரியையும், இரட்சண்ய ஒளியும், இரட்சண்ய சந்தோஷமும் உருவாகும் நேரம் வந்துவிட்டதை தேவன் தமது மகனுக்கு தெரியப்படுத்தினார். தேவனோடு நெருங்கிய பந்தம் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும்தான் உலகத்தோடுள்ள பந்தம் முடிவு பெறுவதை அறியும் ஞான கண்கள் கிடைக்கும். 

இரண்டாவது, வேதவாக்கியம் நிறைவேறதக்கதாக என்று கூறப்பட்டுள்ளது. வேதவாக்கியம் என்பது எழுத்தேடுகள் என்று பொருள். தேவன் எழுதி கொடுத்த எழுத்தேடுகளின் பரிபூரணம் நிறைவுபெறும் நேரம் வந்துவிட்டது. இயேசுகிறிஸ்துவின் முழு வாழ்க்கையும் தேவனுடைய வார்த்தையாகவே இருந்தது. உரைக்கப்பட்ட வார்த்தை – எழுதப்பட்ட வார்த்தை – மனுவுருவான வார்த்தை – ஆவியுருவான வார்த்தை என்று அறியப்படுகின்றது. நியாயபிரமாணங்களின் –  தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலே இயேசுகிறிஸ்து. 

மூன்றவதாக, எழுத்தேடுகளின் நிறைவேறுதலாக தாகமாயிருக்கிறேன் என்று கூறுகின்றார். இயேசு இவ்வாறு கூறுவதில் சில உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று, மனித வாழ்வின் முடிவில் உண்டாகும் தாகம். மனிதன் மரணத்துக்குள் செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை காட்டும். இன்னொன்று, இறுதி அத்தியாயத்திலாவது மனிதர்கள் தங்கள் கடமையை உணர்ந்து – தாகம் தீர்த்தலை – செய்கிறார்களா என்று சோதித்து பார்க்கின்றார். 

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கினவராக தாகமாய் இருக்கிறேன் என்று கூறுகின்றார். நிரபராதியாகிய தன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் தன்னை நியாயம் விசாரித்து கழுமரமேற்றியதால் நீதிக்கான தாகம் கொண்டார். குற்றமில்லா தனது இரத்தத்தை முழுவதுமாக வெளியேற்றி குற்றவாளிகளை – பாவிகளை குற்றமற்றவர்களாக தம்முன் நிறுத்தவிரும்பி தன் தூய இரத்தத்தை வெளியேற்றியதினால் இரட்சண்ய தாகம் கொண்டார். தன்னைப் போல் குற்றமில்லாதிருந்தும் இரட்சிக்கப்பட்ட தேவ மனிதர்கள் குற்றவாளிகளின் சிறைகளிலும், பிடிகளிலும் அகப்பட்டு அநியாயமாக வதைக்கப்படுகிறதினிமித்தமும், ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டிய நியாயம் கிடைக்காததினிமித்தம் நியாயத்துக்கான தாகம் கொண்டார். 
இயேசு, நீதியின்மேல் பசிதாகம் கொள்ளுகிறவர்கள் பாக்கியவாஙன்கள் என்கிறார். நமது தாகம் எப்படிப்பட்டது?

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. 
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன். நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. 
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.சங்கீதம் 42:1-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME