இயேசு தமது தாய் அருகே நின்ற அன்பான சீஷனைக் கண்டு

இயேசு தமது தாய் அருகே நின்ற அன்பான சீஷனைக் கண்டு

Jesus saw His mother,disciple whom He loved standing by,He said,Woman,behold ur son. (John 19:26)

John 13:23; John 20:2; John 21:7,20,24; 2Samuel 9:1; Proverb 23:22; Daniel 10:19; Matthew 12:50; Act 4:13; 2Corinthians 8:1-5.

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். (யோவான் 19:26)

யோவான் 13:23; யோவான் 20:2; யோவான் 21:7,20,24; 2சாமுவேல் 9:1; நீதிமொழிகள் 23:22; தானியேல் 10:19; மத்தேயு 12:50; அப்போஸ்தலர் 4:13; 2கொரிந்தியர் 8:1-5.

அன்பு சீஷன்:
இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் என்று யோவான் சுவிசேஷத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த யோவான் இயேசுவின் உறவினர் என்பது வரலாறு. இயேசுவின் சீஷர்களில் மிகவும் வயது குறைந்தவர். 20 வயதுக்குட்பட்டவர் என்பது பாரம்பரியம். இயேசுவின் மார்பருகே சாய்ந்து இயேசுவோடு நல்ல நெருக்கத்தைக் கொண்டிருந்தவர் என்பது விவிலியம். 

இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை அவரோடிருக்கவே தெரிந்துக் கொண்டார் என்பது உண்மை. மாற்கு 3:14. சீஷர்கள் குருவோடிருக்கவே தெரிந்துக் கொள்ளப்படுகிறார்கள். அதைப்போலவே தேவனோடு சகவாசம் கொள்ளவே ஆதி மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டார். பாவத்தினால் உண்டான பிரிவினை உண்டானபின்பும்  ஏனோக்கும், நோவாவும் தேவனோடு நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதைப்போலவே இயேசுகிறிஸ்துவும் தம்மோடிருக்க சீஷர்களை தெரிந்துக் கொண்டார். 

‘சீஷத்துவம் என்பது சீஷனாகவே இருந்துக்கொள்’ என்பதாகும். குருவாக எஜமானாக மாற முயற்சிக்காதே என்பதாகும். சீஷர்கள் இயேசுவுக்கு ஆலோசனை சொல்லுவதை இயேசு அங்கீகரிக்கவில்லை. தாம் எதை சொல்லுகிறோமோ அதையே சீஷர்கள் பிரசங்கிக்க வேண்டும். தாம் எதை செய்கிறோமோ அதையே சீஷர்கள் செய்ய வேண்டும். இதுவே சீஷத்துவத்தின் மாண்பு. 

அன்பு வலிய வருகிறதாயிருந்தாலும் கீழ்படிதல் உள்ள இடத்தில் மட்டுமே அன்பு நின்று நிரவும். அங்கு மட்டுமே அது பெருகிக்கொண்டேயிருக்கும். கீழ்படிந்த யோவானிடம் இயேசுவின் அன்பு பாய்ந்தது. யோவானோ இயேசுவிடம் அன்பையும் கீழ்படிதலையும் கூட்டி வழங்கினார். இக்காலத்தில் அன்பை பேசும் இடத்தில் கீழ்படிதல் இல்லை. கீழ்படிதல் உள்ள இடத்தில் அன்பு இல்லை. 

பவுல் அன்பைக் குறித்து ஏராளமாக எழுதி வைத்துள்ளார். 1கொரிந்தியர் 13. பவுல் இயேசுவிடமிருந்து அன்பை பெற்றுக்கொள்ள மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உடன்படிக்கை செய்யவில்லை. உண்மையான கீழ்படிதலை வெளிபடுத்தினார். அதைபோன்று அன்பையும் வாரி வழங்கினார். கிறிஸ்துவின்மேல் நான் கொண்டுள்ள அன்பை விட்டு உலகத்தின் எந்த ஆதிக்கசக்தியும் பிரிக்கமுடியாது என்று அழுத்தமாக தெரிவித்தார். அதனால்தான் எல்லாவற்றையும்விட அன்பே பெரியது என்றும், அன்பே இறுதிவரை நிற்கும் என்றும் கூறினார். 

‘கீழ்படிதலில் உச்சம் காணாத ஒருவரும் அன்பின் ஆழத்தை அறிய இயலாது’ என்று ஆணித்தரமாகக் கூறுகின்றேன். 
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. 
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. 
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:31-39.

ADD YOUR COMMENT

Powered By Indic IME