இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொன்னார்

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொன்னார்.

So when Jesus had received the sour wine, He said,It is finished. (John 19:30)

Genesis 3:15; Isaiah 53:10,12; Daniel 9:24,26; zecharia 13:7; Romans 3:25,26; Romans 10:4; 1Corinthians 5:7; Colossians 2:13-17; Hebrew 9:11-14; Hebrew 10:1-4.

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30)

ஆதியாகமம் 3:15; ஏசாயா 53:10,12; தானியேல் 9:24,26; சகரியா 13:7; ரோமர் 3:25,26; ரோமர் 10:4; 1கொரிந்தியர் 5:7; கொலோசெயர் 2:13-17; எபிரெயர் 9:11-14; எபிரெயர் 10:1-4. 

முடித்து வைத்த இயேசு: 
பாவம் எப்பொழுது பூமியில் உண்டானதோ அப்பொழுதே தேவனுடைய இரட்சண்ய கிரியை ஆரம்பமானது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த இரட்சண்ய ஒளி அல்லது இரட்சண்ய பாத்திரம் தேவனுடைய அழைப்புகளினூடே, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலினூடே, தேவனுடைய நியமனங்களினூடே, தேவனுடைய பிரமாணங்களினூடே, கிருபையாக பிரகாசித்து கொண்டிருக்கின்றது. காலம் நிறைவேறினபோது கலாத்தியர் 4:5 ன் படி தேவன் தமது குமாரனை தேவகுமாரனாக உலகிற்கு அடையாளப்படுத்தினார். அதுவரையிலும் எல்லைகளினூடாக கிரியை செய்து கொண்டிருந்த இரட்சண்யம் முழு உலகிற்குள்ளும் பகிரங்கமாக கிரியை செய்யும்பணி ஆரம்பமானது. அந்த பணியை கர்த்தராகிய இயேசு விவிலிய வாக்கியங்களின்படியாக செய்து நிறைவேற்றினார். 
இந்த இரட்சண்ய கிரியை அன்பு, இரக்கம், கிருபை, அற்புதங்கள், அடையாளங்கள், பலத்த கிரியைகள், உபதேசங்கள் போன்றவைகள் மூலமாக வெளிப்பட்டது. முடிவாக இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதலினால் பூரணபடுத்தப்படுகிறது. இனி இந்த இரட்சண்ய கிரியையை ஒருவரும் தடுக்க முடியாது. தேவனே துவங்கி தேவனே முடித்து வைக்கிறார். இயேசுவே துவங்கி அவரே தம் சரீரத்தில் முடித்து வைக்கிறார். 

அவர் தம் சரீரத்தில் முடித்து வைத்த இரட்சண்யம் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்குள் உருவாக்கப்படும் விசுவாசத்தின் மூலமாக ஆரம்பிக்கப்படுகின்றது. அப்படிபட்டவர்கள் அவரது இரட்சண்யத்தை சுமந்து செல்லும் பாத்திரமாக மாறுகின்றார்கள். தேவன் அவர்களுடன்னேகூட இருந்து அதே கிரியைகளை நடப்பிக்கின்றார். அன்று முடித்துவைத்த இரட்சண்ய கிரியை மலைகளையும், குன்றுகளையும், சமுத்திரத்தையும், மொழிகளையும், கலாச்சாரங்களையும், ஜாதிகளையும் கடந்து பாவங்களின் ஆணிவேரை அறுத்து இருளுக்கு முடிவு உண்டாக்கி மரணத்துக்கும், சாத்தானுக்கும் எச்சரிக்கை செய்துகொண்டே  முன்னேறி சென்று கொண்டிருக்கின்றது. பாவம், மரணம், சாத்தானுக்கு முடிவு உண்டாக்கபடுவதே இரட்சண்ய கிரியை முடிவு பெறும் நேரமாகும். அதுநாள்வரையிலும் முடிவுபரியந்தமும் நிலைத்திருப்பவர்களே இரட்சிப்பின் அலங்காரங்களாக தேவன் முன்னிலையில் நிற்பர். 

அவர் முடித்து வைத்ததை நாம் துவங்கி முன்னெடுத்து செல்வதற்காகவே சபையை ஏற்படுத்தி ஆவியை தந்துள்ளார். அந்த சபைகளுக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் இரட்சண்யத்தை முடித்துவைக்கும் செயலாக மாறிவிடும். அவர் நம்மில் துவங்கியதை அவரே முடித்து வைப்பது வரையிலும் ஓடுவோமாக. 
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. 

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். 

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:4-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME