இயேசு இவ்வுலகைவிட்டுப் பிதாவிடம் போகும்படியான வேளை வந்ததை அறிந்தார்

இயேசு இவ்வுலகைவிட்டுப் பிதாவிடம் போகும்படியான வேளை வந்ததை அறிந்தார்.

John7:6,30; John 8:20; John11:9,10; John 12:23; John 17:1,11; John 18:4; Matthew 26:45; Luke9:51; Luke 13:32,33; Luke 22:53; Ecclesiastes 3:1-11.

பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். (யோவான் 13:1)

யோவான் 7:6,30; யோவான் 8:20; யோவான் 11:9,10; யோவான் 12:23; யோவான் 17:1,11; யோவான் 18:4; மத்தேயு 26:45; லூக்கா 9:51; லூக்கா 13:32,33; லூக்கா 22:58; பிரசங்கி :1-11.

தன் வேளையை அறிந்திருந்த இயேசு.
காலம் நிறைவேறினபோது வெளிபட்ட தேவகுமாரனாகிய கிறிஸ்துவின் வாழ்வில் அவர் செய்த எல்லா காரியங்களும் பிதாவின் வேளைக்கு உட்பட்டே நடந்துள்ளது. ஒன்றையும் இயேசு தம்மிஷ்டபடி தமக்கிஷ்டமான நேரத்தில் செய்ததில்லை. பிதா தனக்கு காண்பிப்பதும் சொல்லுவதுமான அடைப்படையிலேயே கிரியைகளை நடப்பித்தார். அவருடைய பிறப்பு, ஊழிய பிரவேசம், பாடுபடுதல், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகிய யாவும் சரியான முறையில் சரியான நேரத்திலேயே நடைபெற்றது.
கர்த்தராகிய இயேசு பரலோகத்திற்கு சென்றபின்பு பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவராக இருந்தாலும் தமது சரீரமாகிய சபைக்குள் செயல்படுத்துகின்ற ஒவ்வொரு கிரியைகளையும் அவருடைய வேளையிலேயே தான் செய்கிறார். பிதாவின் வழிகாட்டுதல்படி தமது பரிசுத்த ஆவியானவரைகொண்டு ஒவ்வொரு காரியங்களையும் அதினதின் நேரத்திலே நேர்த்தியாக செய்து வருகிறார்.

சபையின் இறுதி அத்தியாயமாகிய எடுத்துக்கொள்ளப்படுதலில் இயேசுகிறிஸ்து மேகமீதில் வருவதும், தமது மணவாட்டியாகிய சபையை எடுத்துகொள்வதும் ஏற்கனவே பிதாவினால் குறிக்கப்பட்ட வேளையிலேயே தான் நடத்துவிப்பார். தாம் வந்து பூமியை 1000 வருடம் அரசாளுவதும் ஏற்கனவே பிதாவினால் முன்குறிக்கப்பட்டதாகும். அது அந்த வேளையிலேயே தான் நடந்தேறும்.

உலகத்தின் கிரியைகளுக்கு முடிவு உண்டாக்குவதும், சாத்தானின் கிரியைகளுக்கு முடிவு உண்டாக்குவதும் ஏற்கனவே அவர் முன்குறித்த நேரமாகவே காணப்படும்.

உலகின் எல்லா அதிகாரங்களுக்கும், துற்கிரியைகளுக்கும், அக்கிரமங்களுக்கும், பிசாசின் ஆக்கிரோஷமான செயல்பாடுகளுக்கும் முடிவுநாள் எழுதபட்டாயிற்று. சபைகளை அடித்து நொறுக்கி தேவனுடைய பிள்ளைகளை உபத்திரவபடுத்துகிற துன்மார்க்கர்களுக்கும் முடிவுநாள் எழுதபட்டாயிற்று.

முடிவுநாள் எழுதபட்டதினால் தேவனுடைய பிள்ளைகள் குறைவிலும் உபத்திரவத்திலும் வியாதிகளிலும் தோல்விகளிலும் இழப்புகளிலும் பொறுமையும் சகிப்பும் கீழ்படிதலும் உள்ளவர்களாய் விசுவாசத்தையும் பரிசுத்தத்தையும் தற்காத்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

ஒவ்வொன்றுக்கும் நேரத்தையும் வேளையையும் வைத்திருக்கிறார். தோல்வி, ஜெபம் கேட்கப்படவில்லையே என்ற கவலை வேண்டாம். அவருடைய வேளை வரும்போது தண்ணீர் திராட்சைரசமாக மாறும், 5 பேர் உணவு 5000 பேர் உணவாக மாறும். பொறுத்திருங்கள்.

பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2பேதுரு 3:8-14

ADD YOUR COMMENT

Powered By Indic IME